டேஸ்டான ஊத்தப்பம் சாப்பிட ஆசையா? பாம்பே ஸ்டைல் பன்னீர் ஊத்தப்பம் ரெசிபி இதோ!

இட்லி, தோசை,பொங்கல் என தொடர்ந்து சாப்பிடும் நமக்கு ஒரு நாள் ரவை வைத்து புதுவிதமான ஊத்தப்பம் செய்து சாப்பிடலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

ரவை – 2 கப்
தயிர் – ஒரு கப்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
கடுகு- அரை தேக்கரண்டி
ஓமம் – அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – இரண்டு
பச்சை மிளகாய் – 1
கேரட் – 1
முட்டைகோஸ் – அரை கப்
துருவிய பன்னீர் – ஒரு கப்
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு
கருவேப்பிலை மற்றும் மல்லி இலை – கைப்பிடி அளவு

செய்முறை

முதலில் ரவையை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த ரவையுடன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். இந்த கலவையில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், ஓமம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்து பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் துருவிய கேரட் மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின் நாம் துருவி வைத்திருக்கும் பன்னீர் சேர்த்து வதக்க வேண்டும். இறுதியாக கருவேப்பிலை மற்றும் மல்லி இலைகளை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

நன்கு வதங்கிய இந்த கலவையை நாம் ரவை கலந்து வைத்திருக்கும் பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நான்கைந்து முறை ரவையுடன் சேர்த்து இந்த காய்கறிகளை கலந்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது மாவு தயாராக உள்ளது.

கீரையா என  ஓடும் குழந்தைகளுக்கு முறுமுறுவென மணத்தக்காளி கீரை போண்டா!  ரெசிபி இதோ!

தோசை கல் நன்கு சூடானதும் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் இந்த மாவை தோசை பதத்திற்கு ஊற்றிக் கொள்ளவும். மெல்லியதாக ஊத்த வேண்டிய அவசியம் இல்லை. மாவு பொன்னிறமாக வெந்ததும் மீண்டும் ஒருமுறை எண்ணெய் சேர்த்து மாற்றிக் கொள்ளவும். அப்பொழுது நமக்கு சுவையான பாம்பே ஸ்டைல் ஊத்தப்பம் தயார். இந்த ஊத்தாப்பத்திற்கு தேங்காய் சட்னி அல்லது மல்லி புதினா சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

Exit mobile version