கீரையா என  ஓடும் குழந்தைகளுக்கு முறுமுறுவென மணத்தக்காளி கீரை போண்டா!  ரெசிபி இதோ!

கீரைகளில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது. இது குழந்தைகளின் கண் பார்வை, ஞாபக சக்தி, நோய் எதிர்ப்பாற்றல் என அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பெரும்பான் குழந்தைகளுக்கு கீரை பிடிப்பதில்லை. கீரையை நாம் குழம்பாகவும், கடையல் ஆகவும் செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கின்றனர். இதனால் சற்று புதிய முறையில் கீரை வைத்து முறுமுறுவென போண்டா செய்து கொடுக்கலாம் வாங்க.

செய்ய தேவையான பொருட்கள்

இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – ஐந்து முதல் பத்து பல்
பச்சை மிளகாய் – இரண்டு
கடலை மாவு – இரண்டு கப்
அரிசி மாவு – ஒரு கப்
மிளகாய் தூள் அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
பெருங்காய பொடி – அரை தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 2
மணத்தக்காளி கீரை – ஒரு கப்

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சிறிய துண்டி இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு பெரிய பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அளவு கடலை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், அரைத்த பச்சை மிளகாய் விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

ஈவினிங் ஸ்நாக்ஸாக ஸ்வீட் சாப்பிட ஆசையா? செட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ரெசிபி இதோ!

தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். இறுதியாக நாம் கழுவி நறுக்கி சுத்தம் செய்து வைத்திருக்கும் மணத்தக்காளி கீரைகளையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது மாவு தயாராக உள்ளது இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு கடாயில் எண்ணெய் வைத்து சூடானதும் இந்த உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

மிதமான தீயில் உருண்டைகளை பொரிக்கும் பொழுது போண்டா நன்கு மொறு மொறுவென வரும். சுவையான இந்த போண்டா நாம் ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம்.

Exit mobile version