லஞ்ச் பாக்ஸ் காலியாகனுமா? ஆந்திரா ஸ்டைல் கோங்குரா ரைஸ் ட்ரை பண்ணுங்க!

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலைக்குச் செல்லும் பெரியவர்கள் வரை மதிய உணவு கொண்டு செல்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த மதிய உணவு மிகவும் சுவையானதாகவும் சத்து நிறைந்ததாகவும் மாற்றுவது சமைப்பவர்களின் கடமை. அந்த வகையில் சுவையான மற்றும் சத்து நிறைந்த கோங்குரா ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள்
காய்ந்த வத்தல் – 5
சீரகம் – ஒரு தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
கோங்குரா இலை அல்லது புளிச்சக்கீரை – ஒரு கப்
மஞ்சள்தூள் – ஒரு தேக்கரண்டி
புளி – சிறிதளவு
நல்லெண்ணெய் – மூன்று தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை – கைப்பிடி அளவு
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
வத்தல் – 2
பெருங்காய பொடி – இரண்டு சிட்டிகை

செய்முறை

முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம், சீரகம், காய்ந்த வத்தல் இவற்றை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த இந்த பொருட்களை சிறிது நேரம் கழித்து ஆற வைத்து பொடியாக மாற்றிக் கொள்ளவும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் கோங்குரா இலை அல்லது புளிச்ச கீரையின் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், புளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த புளிச்சக்கீரை எண்ணெயில் வதக்கும் பொழுதே நன்கு வெந்துவிடும். அதில் நாம் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பொடியையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

இறுதியாக இந்த கலவையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த வத்தல், கருவேப்பிலை, கைப்பிடி அளவு வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். இதில் நாம் அரைத்து வைத்திருக்கும் கோங்குரா விழுதுகளை சேர்த்து நன்கு கிளரி கொடுக்க வேண்டும்.

பெங்களூர் ஸ்டைல் ஒரிஜினல் பிசி பெலே பாத் டேஸ்ட் பண்ணனுமா? அப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க!

இறுதியாக வடித்த சாதத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து கிளறி கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான கோங்குரா ரைஸ் தயார்.