ரெஸ்டாரன்ட் சுவையில் பாஸ்தா! இனி நம்ம வீட்டிலேயே ட்ரை பண்ணலாம் சூப்பர் ரெசிபி இதோ!

பாஸ்தா சாப்பிட ரெஸ்டாரன்ட் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த ஒரு ரெசிபி போதும் இனி நம்ம வீட்டிலயும் அதே சுவையில் பாஸ்தா செய்து குழந்தைகளை அசத்தலாம் வாங்க. தக்காளி வைத்து ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இத்தாலியன் பாஸ்தா செய்வதற்கான அருமையான ரெசிபி இதோ!

ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு தக்காளியை நான்காக கீரி சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் காரத்திற்கு ஏற்ப மூன்று பச்சை மிளகாய் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பத்து நிமிடம் கழித்து தக்காளி நன்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம்.

தக்காளி சூடு குறைந்ததும் அதன் தோள்களை நீக்கிவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி மற்றும் காய்ந்த வத்தல் இவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய 10 பல் வெள்ளை பூண்டு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி சில்லி பிளக்ஸ், ஒரு தேக்கரண்டி ஆர்கனோ சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும்.

இந்த கலவையில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதுகளை சேர்த்து கொள்ளலாம். இதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.தக்காளி நன்கு கொதித்து வரும் பொழுது இரண்டு தேக்கரண்டி பிரஸ் கிரீம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி நாட்டுச்சக்கரை சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை சேர்த்துக் கொள்வது உங்கள் விருப்பமே.

வீட்டில் காய்கறி இல்லாத சமயங்களில் இல்லத்தரசிகளுக்கு கைகொடுக்கும் அப்பளம் குழம்பு!

இந்த கலவையை மிதமான தீயில் ஒரு 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து நாம் வெந்நீரில் ஊற வைத்திருக்கும் பாஸ்தாவை சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

அதன் பின் பாதுகாப்பு அளவு சீஸ் துண்டுகளை பொடியாக நறுக்கி இதில் தூவி திரும்பவும் மூடி போட்டு வேக வைக்கவும். இரண்டு முதல் மூன்று நிமிடத்தில் சீஸ் உருகி நன்கு கலந்து விடும் இப்பொழுது சுவையான இத்தாலி ஸ்டைல் தக்காளி பாஸ்தா தயார்.