ரம்ஜான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி! சத்தான சிறுதானிய வைத்து நம் வீட்டிலேயே செய்வதற்கான அசத்தல் ரெசிபி!

ரம்ஜான் என்றாலே நம் நினைவிற்கு வருவது நோன்பு கஞ்சி தான். மிதமான காரசாரத்துடன், எளிதில் செரிமானமாக கூடிய இந்த நோன்பு கஞ்சி உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடியது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மட்டுமே கிடைக்கும் இந்த நோன்பு கஞ்சி வீட்டில் உள்ள சிறுதானியங்களை வைத்து எளிமையாக சுவையாக செய்வதற்கான அசத்தல் ரெசிபி இதோ.

இன்று ரம்சான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி நம் சிறுதானிய வகையான வரகு அரிசியை கொண்டு செய்வதற்கான ரெசிபியை இதில் பார்க்கலாம். ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் இரண்டு பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், 2 பிரியாணி இலை, ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

பெரிய வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் 10 முதல் 15 சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். அது உடன் பச்சை மிளகாயை இரண்டாக கீரி சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இதில் கால் கிலோ சிக்கனை சேர்த்து வதக்க வேண்டும். நோன்பு கஞ்சி செய்வதற்கு சிக்கனை முதலில் நன்கு கழுவி சுத்தம் செய்து கைமா பதத்திற்கு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

insi

எண்ணெயுடன் சிக்கனை நன்கு வதக்கும் பொழுது இரண்டு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக இரண்டு பழுத்த தக்காளி பழம், கைப்பிடி அளவு மல்லி இலை மற்றும் புதினா இலைகளை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து கால் தேக்கரண்டி கறி மசாலா தூள் அல்லது கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும் ஒரு கப் வரகு அரிசிக்கு ஆறு கப் தண்ணீர் என்ற விதத்தில் நாம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். குக்கரில் தண்ணீர் நன்கு கொதிக்கும் பொழுது ஒரு மணி நேரம் ஊற வைத்த வரகரிசி ஒரு கப், அரை கப் பாசிப்பருப்பு சேர்த்து கலந்து கொடுத்து குக்கரை மூடி வைக்க வேண்டும்.

தோசை, பூரி, சப்பாத்தி அனைத்திற்கும் ஏற்ற ஒரே சைடிஷ் பட்டாணி உருளைக்கிழங்கு குருமா! சுவையான ரெசிப்பி!

மிதமான தீயில் ஆறு விசில்கள் வரை வேக வைத்து கொள்ளவும். அழுத்தம் குறையும் வரை குக்கரை ஒரு ஓரமாக வைத்து விடவும். இப்பொழுது ஒரு கப் தேங்காய் பால் தயார் செய்து கொள்ளவும். குக்கரை திறந்தவுடன் நாம் தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய் பால் ஊற்றி கிளறினால் வாசமான ரம்ஜான் நோன்பு கஞ்சி தயார். சுடசுட, வாசமாக இருக்கும் இந்த கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.