முதுகெலும்பு வலியா? எலும்புகளை இரும்பு போல் பலப்படுத்தும் கிராமத்து ஸ்டைல் பிரண்டை சட்னி!

கிராமப்புறங்களில் தோட்டத்தில் இயற்கையாக வளர்ந்து வரும் பிரண்டை அதிக மருத்துவ குணம் கொண்டது. விட்டமின் சி சத்து நிறைந்த பிரண்டையை சாப்பிடுவதன் மூலம் அஜீரணக் கோளாறு, வயிற்றுவலி, மாதவிடாய் பிரச்சனை, முதுகெலும்பிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது. இதனை மருத்துவ குணம் நிறைந்த பிரண்டையை வைத்து துவையல் செய்து சாப்பிடலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை – இரண்டு தேக்கரண்டி
மல்லி – ஒரு தேக்கரண்டி
வத்தல் -3
சீரகம் – ஒரு தேக்கரண்டி
வெள்ளை எள் – ஒரு தேக்கரண்டி
பிரண்டை – ஒரு கப்
வெள்ளை பூண்டு – 5
புளி- சிறிதளவு
எண்ணெய் மற்றும் உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயில் வேர்க்கடலை, மல்லி, வத்தல், சீரகம் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். இறுதியாக வெள்ளை எள் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கி சுத்தம் செய்து வைத்திருக்கும் பிரண்டை வெள்ளைப்பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். முதல் பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வதக்க வேண்டும். இறுதியாக சிறிதளவு புளி சேர்த்துக் கொள்ளலாம்.

கீரையா என  ஓடும் குழந்தைகளுக்கு முறுமுறுவென மணத்தக்காளி கீரை போண்டா!  ரெசிபி இதோ!

இந்த கலவையை சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது நமக்கு பிரண்டை துவையல் தயார். அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொண்டால் சுவையாக இருக்கும். இந்த பிரண்டை துவையலை இட்லி, தோசை, சப்பாத்தி, பழைய சாதம் என அனைத்திற்கும் சிறப்பான பொருத்தமாக இருக்கும்.

Exit mobile version