இட்லிக்கு எப்பவும் ஒரே மாதிரியான சட்னி, சாம்பார் என வைத்து சாப்பிடுவது சலிக்கும் நேரங்களில் புதுவிதமாக காரப்பொடி வைத்து இட்லியை டேஸ்டாக மாற்றி சாப்பிடும் பொழுது சற்று சிறப்பாக இருக்கும். அந்த வகையில் ஐந்து முதல் பத்து நிமிடங்களில் தயாராகும் குண்டூர் ஸ்பெஷல் கார இட்லி ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
இட்லி மாவு – 1 கப்
காய்ந்த வத்தல் – 15 முதல் 20
கடலைப்பருப்பு – 50 கிராம்
மல்லி – 25 கிராம்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
புலி – பாதி எலுமிச்சை பழ அளவு
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
நல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் – 1
செய்முறை
புதிதாக அரைத்த இட்லி மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து மினி இட்லிகளாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து காய்ந்த வத்தலை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அதை எடுத்து கடலைப்பருப்பு, மல்லி,கருவேப்பிலை, சீரகம், , புலி இவற்றை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களின் சூடு ஆறியதும் மிக்சியில் சேர்த்து பரபரவென அரைத்துக் கொள்ளவும். மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை.
சுகர் பிரச்சனைக்கு தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட கஷ்டமா இருக்கா… அப்போ ரசம் வச்சி சாப்பிடுங்க!
அதை கடாயின் சிறிதளவு எண்ணெய் சேர்த்து தாளிப்பிற்காக கடுகு சேர்த்துக் கொள்ளவும். கடுகு பொறிந்ததும் அதில் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயங்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இந்த நேரத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடி மற்றும் இட்லிகளை சேர்த்து நன்கு எண்ணெயில் படும்படி கிளறி கொடுக்க வேண்டும்.
இப்பொழுது நமக்கு சுவையான குண்டூர் ஸ்டைல் காரை இட்லி தயார். தேவைப்பட்டால் வாசனைக்காக சிறிது மல்லி இலை தூவி தேவைப்பட்டால் வாசனைக்காக சிறிது மல்லி இலை தூவி பரிமாறவும்.