தென்னிந்திய உணவுகளில் முக்கியமான இடத்தை ரசம் பிடித்துள்ளது. ரசம் பிடிக்காதவர்கள் கூட வேண்டும் என விரும்பி கேட்கும் வகையில் நாம் ஒரு ஆட்டுக்கால் ரசம் செய்து அசத்தலாம் வாங்க.
செய்ய தேவையான பொருட்கள்
ஆட்டுக்கால் – கால் கிலோ
வெங்காயம் – இரண்டு
தக்காளி – 2
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
மிளகு – இரண்டு தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – பத்து பல்
சின்ன வெங்காயம் – 10
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 2
பச்சை மிளகாய் – ஒன்று
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கு ஏற்ப
தண்ணீர் – தேவையான அளவு
மல்லி இலை மற்றும் கருவேப்பிலை – கைப்பிடி அளவு
செய்முறை
ஆட்டுக்கால்களை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு உடலில் சேர்த்து நன்கு இடித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வந்ததும் அதனுடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் நாம் உரலில் தட்டி வைத்திருக்கும் ஆட்டுக்கால்களை சேர்த்து எண்ணெயில் பிரட்டிக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.
அதே நேரத்தில் மற்றொரு மிக்ஸி ஜாரில் 10 சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய், மல்லி இலை இவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு விழுதுகளாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த விழுதுகளை கடாயில் சேர்த்து வாசனை வரும் வரையில் நன்கு வதக்க வேண்டும். அதன் பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவை பத்து முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வேண்டும். குக்கரில் சமைத்தால் ஐந்து விசில்கள் வரும் வரை சமைக்க வேண்டும்.
சுகர் பிரச்சனைக்கு தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட கஷ்டமா இருக்கா… அப்போ ரசம் வச்சி சாப்பிடுங்க!
இறுதியாக சிறிதளவு மிளகு, சீரகத்தூள் மற்றும் மல்லி இலை சேர்த்து இறக்கிக் கொள்ளலாம். இப்பொழுது ஊரே மணக்கும் ஆட்டுக்கால் ரசம் தயார். மிக எளிமையாக தயாராகும் இந்த ரசம் அஜீரண கோளாறு, உடல் கை, கால் வலி, சோர்வு என பலவற்றிற்கும் சிறந்த மருந்தாக அமைகிறது.