பக்குவமான இனிப்பில்,மிதமான சூட்டில் பாயாசம் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது. அந்த வகையில் உடலுக்கு குளிர்ச்சியை தரும் பாதாம் பிசின் வைத்து அருமையான பாயாசம் செய்யலாம் வாங்க.. பாதாம் பிசின் பாயாசம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
இந்த பாயாசம் செய்வதற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு முன்பாகவே ஒரு கப் பாதாமை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். நன்கு உரிய பாதாமை கழுவி சுத்தம் செய்து அதன் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு மிக்ஸி சாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் அரை கப் ஜவ்வரிசி சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். ஜவ்வரிசி பாதி அளவு வறுபட்டதும் அரை கப் சேமியா சேர்த்து வறுக்க வேண்டும். சேமியா பொன்னிறமாக வறுபட்டதும், வறுத்த ஜவ்வரிசி சேமியாவை ஒரு அகலமான தட்டில் மாற்றி வைத்து விடவும்.
இப்பொழுது அதே கடாயில் அரை லிட்டர் பால் சேர்த்து காய்ச்சி வேண்டும். பால் நன்கு கொதித்து வரும் பொழுது நாம் வறுத்து வைத்திருக்கும் ஜவ்வரிசி மற்றும் சேமியாவை அதில் சேர்த்துக் கொள்ளலாம். ஜவ்வரிசி மற்றும் சேமியா பாலில் பாதி வெந்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் பாதாம் பழுதுகளை சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும்.
இந்த கலவையை மிதமான தீயில் மூடி போட்டு 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த நேரத்தில் மற்றொரு பாத்திரத்தில் ஒரு கப் நாட்டு சர்க்கரை அரை கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளலாம்.
பிரியாணி சாப்பிட ஆசையா? வாங்க பிரியாணி மாதிரியே எம்டி குஸ்கா வீட்டிலேயே செய்யலாம்!
இப்பொழுது ஜவ்வரிசி மற்றும் சேமியா நன்கு வந்ததும் நாம் ஊற வைத்து வைத்திருக்கும் அரைக்கப் பாதாம் பிசின் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக காய்ச்சிய சர்க்கரை பாகுவை வடிகட்டி சேர்த்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் மூன்று முதல் நான்கு ஏல காய்களை நன்கு இடித்து சேர்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை பழத்தை சேர்த்து கிளறினால் சுவையான பாதாம் பிசின் பாயாசம் தயார்.