பால், சர்க்கரை, மைதா, ரவை என எதுவும் சேர்க்காமல் வாயில் வைத்தவுடன் கரையும் ஸ்வீட் ரெசிபி இதோ!

குழந்தைகளுக்கு பிடித்தமான உணவுகளில் இனிப்பும் ஒன்று. சுட்டித்தனமான குழந்தைகள் முதல் அடம் பிடிக்கும் குழந்தைகள் வரை இனிப்புக்கு அடிமைதான். அந்த இனிப்பு வகைகளை உடலுக்கு எந்த கேடும் தராத வகையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையான முறையில் உடலுக்கு தீங்கு தராத ஒரு இனிப்பு வகை செய்து குழந்தைக்கு கொடுத்து அவர்களை உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

தேவையான பொருட்கள்

வெள்ளம் – இரண்டு கப்
பொரிகடலை – 1 கப்
ஏலக்காய்- 2
நெய் – கால் கப்
எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
ஏலக்காய் தூள் – 2 தேக்கரண்டி
தண்ணீர் – மூன்று கப்
கேசரி பொடி – இரண்டு சிட்டிகை

செய்முறை

முதலில் இரண்டு கப் வெள்ளம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஸ்வீட் செய்வதற்கு அளவு முறை சரியாக இருக்க வேண்டும். நாம் எந்த கப்பில் வெள்ளம் எடுக்கிறோமோ அதே கப்பை பயன்படுத்தி தான் மற்ற பொருட்களின் அளவு எடுக்க வேண்டும்.

இரண்டு கப் வெள்ளத்திற்கு 3 கப் தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க விட வேண்டும். வெள்ளம் நன்கு கொதித்து கரைந்தால் போதுமானது பாகுபதம் தேவையில்லை. அதே நேரத்தில் மற்றொரு கடாயில் பொரிகடலையை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பொரிகடலையில் உள்ள பச்சை வாசனை செல்லும் வரை வறுத்தால் போதும்.

வறுத்த பொரிகடலையை மிக்ஸியில் சேர்த்து மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இரண்டு மூன்று முறை சேர்த்துக் கூட பொடியாக மாற்றிக் கொள்ளலாம். இதில் இரண்டு ஏலக்காய் சேர்த்து பொடி செய்யும் பொழுது மாவு வாசனையாக இருக்கும்.

அதன் பின் ஒரு கடாயில் கால் கப் நெய் சேர்த்து, இதனுடன் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். இரண்டும் சூடானதும் அதில் பொரிகடலை மாவை சேர்த்து கிளற வேண்டும். நெய்யுடன் சேர்ந்து மாவின் வாசனை வரும் வரை கிளற வேண்டும். அதன் பின் அச்சு வெல்லம் நீரை மாவில் மெதுவாக சேர்க்க வேண்டும்.

இரண்டு நாள் ஆனாலும் கெட்டுப் போகாத கிராமத்து ஸ்டைல் சுண்ட வத்தக் குழம்பு!

மொத்தமாக சேர்த்தால் மாவு கட்டியாக மாறிவிடும் சிறிது சிறிதாக சேர்ந்து மாவு கட்டி விழாத அளவிற்க்கு கலந்து கொடுக்க வேண்டும். அதன் பின் மிதமான சூட்டில் மாவை 15 நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும்.


தேவைப்பட்டால் நெய் சேர்த்து கொள்ளலாம். தண்ணீர் பற்றி மாவு அல்வா பதத்திற்கு வந்து விடும்.இந்த நேரத்தில் மேலும் சுவைக்காக ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளலாம். அதன் பின் வாசனைக்காக ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது நமக்கு தேவையான ஸ்வீட் தயாராக உள்ளது. பால், சர்க்கரை, மைதா, ரவை என எந்த பொருளும் இல்லாமல் இந்த இனிப்பு வகையை எளிமையாக செய்துவிடலாம். மேலும் இந்த ஸ்வீட் மூன்று, நான்கு நாட்கள் வரை கெடாமல் அருமையாக இருக்கும்.