அதிகம் புரதச்சத்து நிறைந்த முட்டையை வைத்து நாம் இதுவரை காரசாரமான உணவுகளை மட்டுமே சமைத்து வந்துள்ளோம். முட்டை வைத்து முட்டை குழம்பு, குருமா, தொக்கு, ஆம்லெட், ஆஃப் பாயில், முட்டையை அவித்து சாப்பிட்டு வந்த நமக்கு சற்று மாறுதலாக முட்டையை வைத்து ஸ்வீட் செய்து சாப்பிடலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
முட்டை – ஐந்து
கோதுமை மாவு – 3 தேக்கரண்டி
பால் பவுடர் – 150 கிராம்
சர்க்கரை – 100 கிராம்
பால் – ஒரு கப்
நெய் – 3 தேக்கரண்டி
முந்திரி மற்றும் பாதாம் – கைப்பிடி அளவு
கேசரி பவுடர் – இரண்டு சிட்டிகை
ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் ஐந்து முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளவும். அதில் கோதுமை மாவு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதை அடுத்து இந்த கலவையில் பால் பவுடர் சர்க்கரை, நன்கு காய்ச்சி ஆற வைத்த ஒரு கப் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை 5 நிமிடங்கள் தொடர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்து இந்த கலவையை அதில் ஊற்ற வேண்டும். நெய்யுடன் சேர்த்து இந்த கலவை ஒரு சேர கிளறி கொடுக்க வேண்டும். தொடர்ந்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் விடாமல் மிதமான தீயில் இந்த முட்டை கலவையை கிளறி கொடுக்க வேண்டும்.
முதுகெலும்புகளை பலப்படுத்தும் கருப்பட்டி, தேங்காய்ப்பால் உளுந்தங்கஞ்சி! ரெசிபி இதோ!
தேவைப்படும் பொழுது நெய் சேர்த்து இதனை கிளறி கொள்ளலாம். கடாயில் உள்ள முட்டை கலவை அல்வா பதத்திற்கு திரண்டு வரும் பொழுது நமக்கு தேவையான ஸ்வீட் தயாராக உள்ளது. இப்பொழுது நெய்யில் வறுத்த முந்திரி திராட்சைகளை சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளறிக் கொள்ளவும். இறுதியாக முட்டை வைத்து மிக எளிமையான ஸ்வீட் தயார். இந்த முட்டை ஸ்வீட்டில் முட்டை வாசனை சிறிதளவு கூட வராது என்பதனால் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்து மகிழலாம்.