பாகற்காயில் கசப்பு சுவை அதிகமாக இருப்பதால் சிலர் இதை உணவாக எடுத்துக் கொள்ள விரும்புவதில்லை. ஆனால் அதே பாகற்காயை சுவைத்து பழகியவர்களுக்கு பாகற்காய் வைத்து செய்யும் அனைத்து உணவுகளும் அமிர்தம் தான். இந்த காய் பிடிக்காதவர்களையும் விரும்பி சாப்பிட வைக்கும் இந்த பார்டர் பாகற்காய் ரெசிபி.
முதலில் 250 கிராம் பாவக்காய் நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அந்த பாகற்காயை வட்ட வட்டமாக மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு அகலமான கடாயில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நாம் நறுக்கி வைத்திருக்கும் பாகற்காய் அரை தேக்கரண்டி மஞ்சள் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். குறைந்தது ஐந்து முதல் 10 நிமிடம் ஆவது மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
பாகற்காய் வெந்து வரும் சமயத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் பாதி எலுமிச்சை பல அளவு ஊறவைத்த புளி, ஒரு தேக்கரண்டி நாட்டுச்சக்கரை, காரத்திற்கு ஏற்ப மூன்று காய்ந்தவர்கள் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பாகற்காய் முக்கால் பாகம் வெந்ததும் அதை தனியாக ஒரு தட்டில் மாற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஜவ்வரிசியை வைத்து பாயாசம் மட்டுமல்ல பத்தே நிமிடத்தில் தித்திப்பான அல்வா செய்யலாம்!
அடுத்ததாக மற்றொரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி கடுகு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். கடுகு நன்கு பொரிந்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் புளி விழுதை இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதனுடன் ஒரு தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் நாம் வேக வைத்திருக்கும் பாகற்காயை இதனுடன் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
குறைந்தது பத்து நிமிடம் மிதமான தீயில் பாகற்காயை நன்கு வேக வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் கமகமக்கும் வாசனையுடன் பார்டர் பாகற்காய் தயார். தயிர் சாதம், சாம்பார் சாதம் ரசம் சாதம் என அனைத்து விதமான கலவை சாதத்திற்கும் இந்த பாவக்காய் ரெசிபி அருமையான காம்பினேஷன் ஆக இருக்கும்.