பழத்தை சாப்பிட்டு தோலை தூக்கி எறியாதீங்க.. தித்திப்பான அல்வா செய்யலாம்!

பழங்கள் என்றாலே அதன் தோலை நீக்கி உள்ளே இருக்கும் சதைப்பகுதியை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறிவது தான் வழக்கம். அப்படித்தான் தர்பூசணி பழமும். சிவக்க சிவக்க தித்திப்பாக இருக்கும் தண்ணிச்சத்து மிகுந்த சதை பகுதியை சாப்பிட்டுவிட்டு கடினமான தோல் பகுதியை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் இனி அப்படி செய்யாமல் அந்த தோல் பகுதியை வைத்து இனிப்பான ஸ்வீட் அல்வா செய்யலாம் வாங்க.

நாம் சாப்பிட்டு வேண்டாம் என ஒதுக்கி வைத்திருக்கும் இரண்டு துண்டு தர்பூசணி தோலை எடுத்துக் கொள்ளலாம். அதில் வெளியே உள்ள பச்சை பகுதியை நீக்கிவிட்டு வெள்ளை பகுதியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த வெள்ளைப் பகுதியை காய்கறி துருவல் வைத்து நன்கு துருவி எடுத்துக் கொள்ளலாம். அதன் பின் ஒரு வெள்ளைத் துணியில் இந்த தர்பூசணி துருவலை சேர்த்து தண்ணீரை பிழிந்து எடுத்து சக்கையாக பிரித்துக் கொள்ளவும்.

அன்பின் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து தர்பூசணி சக்கையை அதில் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

தொடர்ந்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் பச்சை வாசனை செல்லும் வரை வதக்க வேண்டும். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அப்படியே வதக்கினால் போதும்.

ஜவ்வரிசியை வைத்து பாயாசம் மட்டுமல்ல பத்தே நிமிடத்தில் தித்திப்பான அல்வா செய்யலாம்!

பத்து நிமிடம் கழித்து அரை கப் சர்க்கரை சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்து தர்பூசணியுடன் கலந்து வரும்பொழுது இரண்டு சிட்டிகை கேசரி பவுடர், பாதி அளவு எலுமிச்சை பழ சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளலாம்.

இறுதியாக அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி பத்து முதல் 15 சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான தர்பூசணி அல்வா தயார்.

Exit mobile version