பந்தியில் பரிமாறப்படும் இன்ஸ்டன்டான பச்சை மாங்காய் ஊறுகாய்! ரெசிபி இதோ…

விசேஷ நாட்களில் பந்தியில் பரிமாறப்படும் அறுசுவை உணவுகளில் ஊறுகாவிற்கு தனி இடம் உள்ளது. இந்த ஊறுகாய் அந்தந்த காலத்தில் கிடைக்கும் பொருட்களை வைத்து மிகச் சிறப்பாக உருவாக்கப்படும். உதாரணமாக இந்த வெயில் காலங்களில் மாங்காய் நமக்கு அதிகமாக கிடைக்கும். அதை வைத்து ஒரு சுவையான பச்சை மாங்காய் ஊறுகாய் ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த ஊறுகாய் செய்வதற்கு முதலில் இரண்டு நடுத்தரமான மாங்காவை எடுத்து அங்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கழுவிய மாங்காவை நன்கு சுத்தமான துணி கொண்டு துடைத்துக் கொள்ளவும். அதன் பிறகு மாங்காக்களை பொடிப்பொடி துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் இரண்டு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், ஒன்றரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து கொள்ளவும். இந்த ஊறுகாயின் சுவையை மேலும் அதிகரிக்க ஒரு பொடி தயார் செய்ய வேண்டும்.

அதற்கு கடாயை சூடேற்றி ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நன்கு பொரியும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும். வறுத்த இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் அரைத்து இந்த கொடியை காரம் உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கும் மாங்காவுடன் சேர்த்து நன்கு கலந்து கொடுக்கவும். இதை ஒரு பத்து முதல் 15 நிமிடங்கள் ஓரமாக வைத்து ஊற வைக்க வேண்டும்.

வித்தியாசமாக சட்னி சாப்பிட ஆசையா? சம்மர் ஸ்பெஷல் வெள்ளரிக்காய் சட்னி!
அந்த நேரத்தில் மற்றொரு கடாயில் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, கருவேப்பிலை, ஐந்து பல் குறித்த வெள்ளைப் பூண்டுவை தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். கடுகு நன்கு புரிந்து வெள்ளைப்பூண்டுவின் நிறம் மாறியதும் தாளிப்பை மாங்காவுடன் சேர்த்து கலக்க வேண்டும். இப்பொழுது ஊறுகாவிற்கு தேவையான அளவு உப்பு மற்றும் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும்.

சுவையான பச்சை மாங்காய் ஊறுகாய் தயார். இந்த ஊறுகாயை சமைத்த உடன் அப்படியே சாதத்தில் வைத்து சாப்பிடலாம் அல்லது ஒரு கண்ணாடி பாத்திரத்தில் பதப்படுத்தி தேவைப்படும் பொழுது கூட எடுத்து சாப்பிடலாம்.