அஜீரண கோளாறு, நெஞ்சு எரிச்சல், பசியின்மை போன்ற நேரங்களில் ரசம் சாதம் உடலுக்கு இதமான உணவாக அமைகிறது. அப்படிப்பட்ட ரசம் சாதத்தை ரசம் தனியாகவும், சாதம் தனியாகவும் செய்யாமல் ஒரே பாத்திரத்தில் ரசம் சாதமாக வித்தியாசம் முறையில் செய்யும் பொழுது நேரமும் உச்சமாகும் சுவையும் மேலும் அருமையாக இருக்கும். இந்த ஒரு பானை ரசம் சாதம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.
இந்த ரசம் சாதம் செய்வதற்கு ஒரு கப் அரிசிக்கு அரை கப் துவரம் பருப்பு, கால் கப் பாசிப்பருப்பு எடுத்து ஒன்றாக சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். இந்த அரிசி பருப்பு கலவையை குறைந்தது 15 நிமிடங்கள் ஆவது தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
குக்கரில் 15 நிமிடங்கள் கழித்து ஊற வைத்த அரிசி பருப்பு சேர்த்துக் கொள்ளவும், அதனுடன் ஒரு பெரிய தக்காளி பழம், இரண்டு பச்சை மிளகாய், எலுமிச்சை பழ அளவு ஊறவைக்க புளி தண்ணீர், 5 பல் பூண்டு, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் மல்லி இலை, ஒரு தேக்கரண்டி மிளகு சீரகம் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் வீதம் தண்ணீர் , தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கு விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும். இப்பொழுது சுவையான ஒன் பார்ட் ரசம் சாதம் தயார். பத்து நிமிடத்தில் தயாராகும் இந்த ரசம் சாதத்தை அப்பளம் உருளைக்கிழங்கு பொரியலுடன் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்