பத்தே நிமிடத்தில் செய்யக்கூடிய  காளான் மல்லி கிரேவி!

காளான் உடலுக்கு அதிகப்படியான சத்து தரக்கூடிய உணவு வகைகளில் ஒன்று. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை நாம் உணவில் காளான் சேர்க்கும் பொழுது குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற காளான் அவசியமாக உள்ளது. காளானில் உள்ள சில குறிப்பிட்ட வகையான சத்துக்கள் இதய நோயை குணப்படுத்தி இதயத்தை வலுவாக்கவும், செரிமான பிரச்சனைகளை தீர்க்கவும் மிக உதவியாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த காளான் வைத்து ஒரு கிரேவி செய்யலாம் வாங்க.

காளான் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்

வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – பத்து பல்
தேங்காய் – ஒரு கப்
மிளகு – இரண்டு டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
மல்லி – இரண்டு டேபிள் ஸ்பூன்
வத்தல் பொடி – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
கறிமசால் பொடி – போன்ற டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடேற்றிக் கொள்ளவும். அதில் தாளிப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

அதன் பின் தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை ஒன்றாக சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும். அந்தக் கலவையை வெங்காயம் வதங்கியதும் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை வாசனை செல்லும்வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த கலவையில் வத்தல் பொடி, கறிமசால் பொடி சேர்த்து எண்ணெயுடன் வதக்கிக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் மல்லி, மிளகு சீரகம் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அந்த கலவையை கடாயின் சேர்த்து வதக்க வேண்டும்.

இந்த நேரத்தில் கழுவி வைத்திருக்கும் காளான் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அப்பொழுதுதான் காளானில் காரம் மற்றும் சுவைகள் ஒரு சேர கிடைக்கும். அதன் பின் அரை கப் தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவை கொதித்த உடன் தேங்காய் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். 

இரண்டு நாள் ஆனாலும் கெட்டுப் போகாத கிராமத்து ஸ்டைல் சுண்ட வத்தக் குழம்பு!

அதன் பின் அடுப்பை அணைத்துவிட்டு வாசனைக்காக மல்லி தலைகள் தூவினால் சுவையான காளான் மல்லி கிரேவி தயார்.