வீட்டில் பெரிதாக காய்கறிகள் இல்லாத பொழுது முட்டை நமக்கு கை கொடுக்கும். முட்டை குழம்பு, முட்டை சாதம், முட்டை வறுவல் என முட்டையை வைத்து ஏதாவது ஒன்று சுவையாக செய்து அசத்தி விடலாம். அப்படி முட்டையை வைத்து ரெஸ்டாரன்ட் சுவையில் ரெசிபி ஒன்று செய்யலாம் வாங்க.
இந்த முட்டை கிரேவி செய்வதற்கு தேவையான அளவு முட்டையை நாம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த முட்டைகளை தொலி உரித்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். நாம் வேகவைத்து தொழில் உரித்து வைத்திருக்கும் அவித்து முட்டையை சேர்த்து கிளற வேண்டும்.
முட்டையின் மீது மசாலாக்கள் நன்கு படும்படி கிளறி கொடுத்து எடுத்து விடவும். இப்பொழுது அதே கடாயில் மீதம் இருக்கும் எண்ணெயில் இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதை ஒரு மிக்ஸி ஜாரிற்கு மாற்ற வேண்டும்.
வெங்காயத்துடன் 10 முதல் 15 முந்திரிப் பருப்பு, இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை இரண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
காரசாரமான மசாலாக்கள் எதுவும் இல்லாமல் எளிமையான முறையில் நொடியில் தயாராகும் சிந்தாமணி சிக்கன்!
அதன் பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி தனியா தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இரண்டு தக்காளிகளை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கி தோல் பிரிந்து வரும் பொழுது மசாலாவின் தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் நாம் அரைத்து வைத்திருக்கும் பொழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மசாலாவை பத்து முதல் 15 நிமிடம் இதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். மசாலாக்களின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் பொழுது நாம் அவித்து பொறித்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து ஒரு நிமிடம் கிளறினால் போதும். சுமையான ரெஸ்டாரன்ட் ஸ்பை குட்டை மசாலா தயார். பரிமாறுவதற்கு முன்பாக பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும்.