காரசாரமான மசாலாக்கள் எதுவும் இல்லாமல் எளிமையான முறையில் நொடியில் தயாராகும் சிந்தாமணி சிக்கன்!

பொதுவாக அசைவ உணவுகள் சமைக்கும் பொழுது அதிக முக்கியத்துவம் கொடுப்பது மசாலாக்களின் கலவைக்கு மட்டுமே. சிறந்த மசாலாக்களை முறையாக சேர்க்கும் பொழுது குழம்பு சுவையாகவும் பார்ப்பதற்கு செக்கச் சிவப்பாக, காரசாரமாகவும் இருக்கும். ஆனால் எந்த மசாலாக்களும் இல்லாமல் எளிமையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுவையாகவும் நொடியில் தயாராகும்
சிந்தாமணி சிக்கன் செய்வதற்கான ரெசிபி இதோ.

முதலில் ஒரு கடாயில் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். நல்லெண்ணெய் நன்கு சூடானதும் அதில் பத்து முதல் 15 காய்ந்த வத்தலை சேர்த்து வதக்க வேண்டும். வத்தலை இரண்டாக கீரி முதலில் அதில் உள்ள விதைகளை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம். இப்படி விதைகள் பிரித்து எடுத்த வத்தலைசேர்த்து சமைக்கும் பொழுது சுவை சற்றே கூடுதலாக இருக்கும்.

வத்தல் நன்கு பொறிந்ததும் 20 சின்ன வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு பத்து பல் பூண்டை தொலி உரித்து நன்கு தட்டி சேர்த்துக் கொள்ளவும். எண்ணெயுடன் சேர்ந்து நன்கு வெங்காயம் வதங்கியதும் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் அரை கிலோ சிக்கனை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய்,சின்ன வெங்காயம், வத்தலுடன் சேர்த்து சிக்கனை நன்கு கலந்து கொடுத்து வேக வைக்க வேண்டும்.

போன்விட்டா இனி கடையில் வாங்க வேண்டாம்! வீட்டிலேயே ஹெல்தியான போன்விட்டா செய்யலாம்!

இப்படி சமைக்கும் பொழுது சிக்கன் வேகுவதற்கு தண்ணீர் சேர்க்க அவசியம் இல்லை. சிக்கனிலிருந்து வரும் தண்ணீரிலேயே கறி முழுதாக வெந்துவிடும். இப்பொழுது ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து வேக வைக்க வேண்டும். பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைத்து எடுத்தால் மசாலாக்கள் எதுவும் சேர்க்காத சிந்தாமணி சிக்கன்.

இறுதியாக வாசனைக்காக பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும்.

Exit mobile version