குழந்தைகள் டீ, காபி குடிப்பதை பெரும்பாலும் பெற்றோர்கள் விரும்புவதில்லை. அதற்கு பதிலாக காலை மற்றும் மாலை வேலைகளில் குழந்தைகளுக்கு சத்து தரக்கூடிய ஹார்லிக்ஸ், போன்விட்டா, சத்து மாவு போன்ற பொருட்களை கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கடைகளில் வாங்கும் போன்விட்டாக்களை விட நம் வீட்டிலேயே ஹெல்த்தியான போன்விட்டா செய்து நம் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வளர்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்படுவதை பார்க்கலாம். வீட்டிலேயே எளிமையான முறையில் ஹெல்த்தியான போன்விட்டா செய்வதற்கான ரெசிபி இதோ.
முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும் அதில் ஒரு கப் மக்கான் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதே கப்பிற்கு பாதி அளவு பாதாம் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக அரை கப் அளவு முந்திரி பருப்பு சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக அரை கப் ஓட்ஸ் சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.. வறுத்த இந்த பொருட்களை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றி ஒரு பத்து நிமிடங்கள் ஆறவிட வேண்டும். இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ளவும். அடுத்ததாக இந்த பொடியுடன் ஒரு தேக்கரண்டி பால் பவுடர் மற்றும் ஒரு தேக்கரண்டி கொக்கோ பவுடர் சேர்த்து கலந்து அரைத்துக் கொள்ளவும்.
கூடுதலாக இனிப்பு தேவைப்படும் பட்சத்தில் ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் வாசனைக்காக இரண்டு ஏலக்காய் சேர்த்து மிக்ஸி ஜாரில் கலந்து நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும். மையாக அரைத்த இந்த பொடியை ஒரு முறை சலித்து காற்று செல்லாத ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அடைத்துக் கொள்ளலாம்.
ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத இந்த ஹோம் மேட் போன்விட்டா பாலுடன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது சுவை அருமையானதாகவும் முழுமையாக சத்து நிறைந்த உணவாகவும் இருக்கும். எந்த வேதிப்பொருட்களும், பதப்படுத்தும் ரசாயனங்களும் கலக்காத இந்த ஹோம் மேட் போன்விட்டா குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் முக்கியத்துவம் அளிக்கிறது.