பத்து நிமிடத்தில் உடுப்பி ஸ்டைல் ஸ்பெஷல் தக்காளி தொக்கு!

இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என அனைத்திற்கும் ஒரு சிறந்த சைடிஷ் என்றால் தக்காளி தொக்கு தான். தக்காளி தொக்கு ஒன்று இருந்தால் போதும் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திருப்திப்படுத்தி விடலாம். அப்படிப்பட்ட அருமையான தக்காளி தொக்கு உடுப்பி ஸ்டைலில் எளிமையாக பத்து நிமிடத்தில் நம் வீட்டில் செய்யலாம் வாங்க.

முதலில் அடி கனமான ஒரு கடாயில் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கி கொள்ளவும். அதில் 15 முதல் 20 தோள் உரித்த வெள்ளை பூண்டு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

கருவேப்பிலை நன்கு வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு பத்து தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். அதே நேரத்தில் இன்னும் கூடுதலாக ஒரு பத்து தக்காளி பழத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து விழுதுகளாக கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். இந்த இரண்டு தக்காளி பழத்தை ஒன்றோடு ஒன்று கலந்து அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், தேக்கரண்டி உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும்.

ஐந்து நிமிடம் கழித்து ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொடுக்கவும். மிளகாய் தூள் பச்சை வாசனை செல்லும் நேரத்தில் ஒரு பத்து முந்திரி பருப்பை கடாயில் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

ஜவ்வரிசியை வைத்து பாயாசம் மட்டுமல்ல பத்தே நிமிடத்தில் தித்திப்பான அல்வா செய்யலாம்!

தக்காளி தொக்கு கெட்டியாக வரும் நேரத்தில் ஒரு தேக்கரண்டி நாட்டுச்சக்கரை சேர்த்துக் கொள்ளவும். மிதமான தீயில் கலந்து கொடுத்து மீண்டும் கொதிக்க வைக்கவும். அந்த நேரத்தில் மற்றொரு கடாயில் ஒரு தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி கடுகு சேர்த்து ஆக வருத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த இந்த பொடியை தக்காளி தொக்கு உடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சரிபார்த்து இறக்கினால் சுவையான உடுப்பி ஸ்டைல் தக்காளி தொக்கு தயார். இந்த தக்காளி தொக்கு இரண்டு நாட்கள் வரை கெட்டுப்போகாது. மேலும் இந்த தக்காளி தொக்கு செய்யும் பொழுது நன்கு பழுத்த தக்காளிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.