நார்ச்சத்து நிறைந்த வாழைத்தண்டு வைத்து அருமையான சூப் ரெசிபி!

வாழைத்தண்டு அதிகப்படியான நார்ச்சத்து கொண்டிருப்பதால் அஜீரண கோளாறு போன்றவற்றை சரி செய்து ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. மேலும் மலச்சிக்கல், கல்லடைப்பு போன்ற நோய்களுக்கும் வாழைத்தண்டு சூப் ஒரு அருமருந்தாக அமைகிறது. இதனை மருத்துவ பயன்கள் நிறைந்த வாழைத்தண்டு சூப் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

குக்கரின் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து கரைந்ததும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 5 பல் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நன்கு கழுவி சுத்தம் செய்த பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு ஒரு கப் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைத்தண்டை அதன் தோள்களை நீக்கி பொடியாக நறுக்கி மோரில் சேர்த்து வைத்தால் அதன் நிறம் மாறாமல் இருக்கும்.

வெங்காயத்துடன் வாழைத்தண்டு சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். அதன் பின் நம் சூப்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
நன்கு வந்த வாழைத்தண்டு மற்றும் வெங்காயத்தின் சக்கை பகுதிகளையும் அதன் சாற்றையும் தனியாக பிரித்தெடுக்க வேண்டும். வேக வைத்த வாழைத்தண்டு,வெங்காயம், வெள்ளைப் பூண்டு, இஞ்சி இவற்றை மட்டும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதை அழைக்கும் பொழுது தேவைப்பட்டால் வடிகட்டி வைத்திருக்கும் தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.

ஹெல்தியாவும் சாப்பிடனும் டேஸ்ட்டாவும் சாப்பிடணுமா? சிறு தானிய வாழைப்பூ அடை!

நன்கு அரைத்தபின் அதன் சாற்றை மீண்டும் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றை மட்டும் ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதில் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

சூப் கொதித்து வரும் பொழுது ஒரு தேக்கரண்டி கான்பிளார் மாவை தண்ணீர் சேர்த்து கட்டி விழாத வண்ணம் கரைத்து அதை சூப்பில் சேர்க்க வேண்டும். அப்பொழுது சூப் மேலும் கெட்டியாக குடிக்கும் பதத்திற்கு மாறிவிடும். இப்பொழுது இந்த சூப் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய மல்லி இலை, பாதி அளவு எலுமிச்சைச்சாறு பிழிந்து விட்டு குடித்தால் வாழைத்தண்டு சூப் தயார். இந்த சூப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாலை நேரங்களில் எடுத்து வந்தால் உடலுக்கு அதிகப்படியான நார் சத்துக்கள் கிடைக்கும்.