நாகூர் ஸ்பெஷல் பாய் வீட்டு கல்யாண தக்காளி ஜாம்! அசத்தல் ரெசிபி இதோ…

ஒவ்வொரு ஊரின் தனி சிறப்புகளும் அந்த ஊரின் திருமணத்தின் போது பரிமாறப்படும் உணவில் பிரதிபலிப்பது வழக்கம். அந்த வகையில் நாகூர், தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் மிகவும் பிரபலம் அடைந்த பாய் வீட்டு கல்யாண பந்தியில் ஸ்பெஷலாக பரிமாறப்படும் தக்காளி ஜாம் என சொன்னாலே வாய் தித்திக்கும். அந்த அளவிற்கு தனி சிறப்பான சுவை கொண்ட இந்த ஜாம் நம் வீட்டிலேயே செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ!

ஒரு குக்கரில் 5 நன்கு பழுத்த தக்காளிகளை நான்காக துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி உடன் 10 பேரிச்சம் பழம், அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

நன்கு வெந்து வந்திருக்கும் தக்காளியின் தோள்களை மட்டும் நீக்கிவிட்டு தக்காளி மற்றும் பேரிச்சம் பழத்தை நன்கு மசித்து எடுத்துக் கொள்ளலாம்.

அடிகனமான அகலமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து பத்து முதல் 15 முந்திரிப் பருப்புகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். மீதம் இருக்கும் அதே நெய்யில் மசித்து வைத்திருக்கும் தக்காளி, பேரிச்சம்பழக் கலவையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூட்டு வலி பிரச்சனைகளை நொடியில் சரி செய்யும் முடவன் கிழங்கு ஆட்டுக் கால் சூப்!

ஐந்து தக்காளிக்கு ஒரு கப் நாட்டுச்சக்கரை அல்லது வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி கொள்ள வேண்டும். காய்ச்சிய சர்க்கரை பாகை நன்கு வடிகட்டி இந்த கலவையினுள் சேர்த்து அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் நன்கு கலந்து கொடுத்து மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

இதற்கிடையில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். இந்த கலவை நன்கு கொதித்து அல்வா பதத்திற்கு கட்டியாகி வரும் பொழுது ஒரு தேக்கரண்டி நெய் வறுத்து வைத்த முந்திரி பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும் . இப்பொழுது சுவையான பாய் விட்டு கல்யாண ஸ்பெஷல் தக்காளி ஜாம் தயார்.

Exit mobile version