சைவ ஆட்டுக்கால் என அழைக்கப்படும் இந்த முடவன் கிழங்கு வைத்து நாம் சூப் செய்து குடிக்கும் பொழுது கை, கால், மூட்டுகளில் உள்ள வழிகள் குணமாகி எலும்பை பலப்படுத்த உதவுகிறது. மூலிகை கிழங்காக பார்க்கப்படும் இந்த முடவன் கிழங்கு வைத்து சூப் செய்வது எப்படி என இந்த ரெசிபியில் பார்க்கலாம்!
ஆடுகளின் கால்கள் அமைப்பை போன்று இந்த கிழங்கின் தோற்றமும் அமைந்திருக்கும். இந்த கிழங்கின் மேல் பகுதியில் ரோமம் போன்ற அமைப்பும் உள்பகுதி மாவு போன்ற கிழங்கு இருக்கும். முதலில் இந்த கிழங்கை வெளியுள்ள தோல் பகுதிகளை நன்கு நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் 10 சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு பெரிய துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது, 10 பல் வெள்ளைப் பூண்டு, பொடியாக நறுக்கிய முடவன் கிழங்கு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, பாதி கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு பட்டை, ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும். அதன் பின் நாம் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் முடவன் கிழங்கு உழுதையும் இதில் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
இப்பொழுது சூப்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அமைதியாக சுவைக்கு ஏற்ப உப்பு, அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.
வாழைப்பூ வா… பிடிக்காது என சொல்பவர்களுக்கு ஒரு முறை துவையல் செய்து கொடுத்துப் பாருங்கள்!
இந்த கலவையை மிதமான தீயில் குறைந்தது 30 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து ஒரு வடிகட்டி கொண்டு வடிகட்டி ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான முடவன் கால் ஆட்டுக்கிழங்கு சூப் தயார். தேவைப்பட்டால் இந்த சூப்பின் மேல் சிறிதளவு மிளகு சீரக பொடி, பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி கலந்து குடித்தால் சுவை அருமையாக இருக்கும்.