தேங்காய் சட்னி, தக்காளி சட்னி சளித்து விட்டதா.. அப்போ பச்சை பட்டாணி சட்னி வைத்துப் பாருங்கள்!

நம் வீடுகளில் காலை மற்றும் மாலை வேலைகளில் பெரும்பாலும் இட்லி அல்லது தோசை தான் உணவாக சமைப்பது வழக்கமாக வைத்துள்ளோம். அந்த இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வது என்பது பெரிய குழப்பத்தில் ஒன்று. தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என எப்போதும் போல அல்லாமல் சற்று வித்யாசமாக பச்சைப்பட்டாணி வைத்து ஒரு சுவையான சட்னி செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

சாய்ந்த வத்தல் – ஐந்து
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 3
இஞ்சி – சிறிய துண்டு
வெள்ளை பூண்டு -10
மல்லி இலை – ஒரு கப்
பச்சை பட்டாணி – ஒரு கப்
தக்காளி -3
புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு
நல்லெண்ணெய் – மூன்று தேக்கரண்டி
கடுகு உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை – கைப்பிடி அளவு

செய்முறை

ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உளுத்தம் பருப்பு, காய்ந்த வத்தல் சேர்த்து வதக்க வேண்டும். பொன்னிறமாக வறுபட்டதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து பச்சை பட்டாணி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

பட்டாணி லேசாக வதங்கியதும் சிறிதளவு இஞ்சி, வெள்ளைப்பூண்டு, கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் கொத்தமல்லி சேர்த்து வதக்க வேண்டும். மல்லி இலை நன்கு வதங்கியதும் தக்காளி, புளி சேர்த்து வதக்கவும். தக்காளியில் இருந்து தோல் பிரியும் அளவிற்கு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
வதக்கிய இந்த பொருட்களை நன்கு ஆற வைக்க வேண்டும். அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து உப்பு மற்றும் தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஆந்திரா ஸ்பெஷல் ஃபேமஸ் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி! ரெசிபி இதோ!

இறுதியாக தாளிப்பிற்காக ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி என்னை சேர்த்து சூடானதும் கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளவும். கடுகு நன்கு பொறிந்ததும் பெருங்காயத்தூள் கருவேப்பிலை சேர்த்து இறக்கி விடவும். இந்த தாளிப்பை சட்னியுடன் சேர்த்து நன்கு கிளறினார் சுவையான பட்டாணி சட்னி தயார்.