தித்திப்பான ஸ்வீட்… ஆனால் ஹெல்தியான ஸ்வீட் ! ரெசிபி இதோ!

ஸ்வீட் அப்படின்னா எல்லோருக்கும் தான் விருப்பம். ஆனால் தற்கால நடைமுறை வாழ்க்கையில் இனிப்பு வகைகளை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் நாம் எடுத்துக் கொள்ளும் இனிப்பு மிக ஆரோக்கியமானதாகவும், சத்து நிறைந்த உணவாக இருந்தால் உடல் நலத்திற்கு மிகச் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் தேங்காய் பால் திரட்டு எளிமையாக செய்வதற்கான ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – மூன்று தேக்கரண்டி
தேங்காய் – ஒரு கப்
வெள்ளம் – ஒரு கப்
அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – ஒரு தேக்கரண்டி
நெய் – மூன்று தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு – 10 -15
உப்பு – ஒரு சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயில் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த இந்த பாசிப்பருப்பை நன்கு மையாக பொடியாக மாற்றிக் கொள்ளவும்.

அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரின் ஒரு கப் தேங்காய், ஒரு கப் வெல்லம், நாம் பொடியாக மாற்றி வைத்திருக்கும் பாசிப்பருப்பு, ஒரு தேக்கரண்டி அரிசி மாவு, ஏலக்காய் தூள் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேவைப்படும் பொழுது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி பருப்புகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும். மீதம் உள்ள நெய்யில் நாம் அரைத்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.
10 முதல் 15 நிமிடங்கள் விடாமல் மிதமான தீயில் கலந்து கொடுக்க வேண்டும். இப்பொழுது சுவையை அதிகரிக்க ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளலாம். வாசனைக்காக மீண்டும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறினால் சுவை அருமையாக இருக்கும்.

சிக்கன் மஞ்சூரியன் உடன் போட்டி போடும் சுவையில் சைவ கோபி மஞ்சூரியன்! ரெசிபி இதோ…

இறுதியாக சுவையான தித்திக்கும் தேங்காய் பால் திரட்டு தயார். எளிமையான முறையில் செய்யும் இந்த தேங்காய் பால் திரட்டு சுவையானதாக மட்டும் இல்லாமல் சத்து நிறைந்ததாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.