இனிப்பு என்றால் குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் நம் வீடுகளுக்கு உறவினர்கள் வரும் பொழுது அவர்களுக்கு இனிப்பு கொடுத்து கவனிக்க வேண்டும். திடீரென்ற வீட்டிற்கு விருந்தாளிகள் வந்துவிட்டாள் பத்தே நிமிடத்தில் பாம்பே அல்வா செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
கான்பிளார் மாவு – 1 கப்
சர்க்கரை – 2 கப்
ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி
கேசரி பவுடர் – அரை தேக்கரண்டி
நெய் – ஐந்து தேக்கரண்டி
பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, பிஸ்தா பருப்பு, பூசணி விதை – அனைத்திலும் 5
செய்முறை
முதலில் ஒரு கப் கார்ன்ஃப்ளார் மாவை ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும். கட்டிகள் விழாக அளவு நன்கு மையாக கரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு கடாயில் இரண்டு கப் சக்கரைக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையில் கம்பி பதம் வர தேவையில்லை. சர்க்கரை தண்ணீரில் கரைந்தால் போதுமானது. அப்பொழுது நாம் கரைத்து வைத்திருக்கும் கான்பிளார் மாவை அதில் சேர்த்து கிளற வேண்டும். தொடர்ந்து பத்து முதல் 15 முதல் நிமிடங்கள் மிதமான தீயில் இதை கலந்து கொடுக்க வேண்டும். கேசரி பவுடரை சிறிதளவு தண்ணீரில் கலந்து இதில் கலந்து கொள்ளலாம்.
கார்ன்ஃப்ளார் மாவு இறுக்கமாகும் நேரங்களில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இறுதியாக நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பாதாம் பருப்பு முந்திரிப்பருப்பு பிஸ்தா பருப்பு மற்றும் பூசணி விதைகளை சேர்ந்து கலந்து கொடுக்க வேண்டும். மேலும் வாசனைக்காக இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
தயாராக உள்ள இந்த அல்வாவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி தனக்கு பிடித்தமான ஷேப்பில் கட் செய்து கொள்ளலாம் . பத்து நிமிடத்தில் சுவையான பாம்பே அல்வா தயார்.