பிரியாணிக்கு சைடிஷ் ஆக கொடுக்கப்படும் இந்த பிரட் அல்வா தனியாக சாப்பிடவும் சுவை அருமையாக இருக்கும். பலர் இந்த பிரட் அல்வா சாப்பிடுவதற்காகவே பிரியாணி ஆர்டர் செய்வதும் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த அளவிற்கு இந்த பிரட் அல்வாவிற்கு தனி ரசிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட அல்வா பிரியர்களுக்கான அசத்தலான ரெசிபி இதோ.
இந்த பிரட் அல்வா செய்வதற்கு பத்து முதல் 15 பிரட் துண்டுகளை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து தூளாக மாற்றிக் கொள்ளவும். ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் 15 முதல் 20 முந்திரி பருப்புகளை பொன்னிறமாக வறுத்து எடுத்து ஓரமாக வைத்து விடவும். மீதமிருக்கும் அதை நெய்யில் நாம் தூள் செய்து வைத்திருக்கும் பிரட் துகள்களை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.
மிதமான தீயில் 10 முதல் 12 நிமிடங்கள் பொறுமையாக அதை வறுத்தெடுக்க வேண்டும். பிரட் நன்கு பொன்னிறமாக மாறியதும் ஒன்றை கப் தண்ணீர், அரை கப் சர்க்கரை, அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும்.
வீடு மண மணக்கும் பாய் வீட்டு பால் புலாவ்! அசத்தலான ரெசிபி இதோ!
சர்க்கரை பிரெட் உடன் சேர்ந்து நன்கு கரையும் வரை கலந்து கொடுக்க வேண்டும். அதன் பின் ஒன்றனை கப் கட்டியான பால் சேர்த்து விடாமல் கிளற வேண்டும். இந்த பிரட் அல்வா பதத்திற்கு வரும் பொழுது சுவைக்கு ஏற்ப தேவைப்பட்டால் மேலும் ஒரு கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பு சேர்த்து கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான பிரட் அல்வா தயார்.