வீடு மண மணக்கும் பாய் வீட்டு பால் புலாவ்! அசத்தலான ரெசிபி இதோ!

பிரியாணி சாப்பிட்டு சலித்து விட்டதா சற்று வித்தியாசமாக அதை சுவையில் புலாவ் செய்து சாப்பிடலாம் வாங்க. பிரியாணியை போன்று அதிகப்படியான மசாலா கலவை இல்லாமல் எளிமையான மசாலாக்களுடன், வீடு மண மணக்கும் பாய் வீட்டு புலாவ் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.

முதலில் ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அண்ணாச்சி பூ என அனைத்திலும் இரண்டு இரண்டு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

அடுத்ததாக இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் 5 முதல் 10 பல் வெள்ளை பூண்டு பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

வெள்ளைப் பூண்டு பாதி வதங்கியதும் கைப்பிடி அளவு புதினா மற்றும் மல்லி இலைகளை சேர்த்து வதக்க வேண்டும். கொத்தமல்லி புதினா இலைகளை வதக்கும் பொழுது அதன் பச்சை நிறம் மாறாத அளவு மிதமான தீயில் வதக்க வேண்டும். அதன் பின் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இதில் ஒரு கைப்பிடி அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

இப்பொழுது ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை கப் தேங்காய் பால் எனும் விதத்தில் ஒன்றரை கப் கெட்டியான தேங்காய்ப்பால் சேர்த்து குக்கரை மூடிவிட வேண்டும். தேங்காய்ப்பால் நன்கு கொதித்து வரும் பொழுது அரை மணி நேரம் ஊறவைத்த ஒரு கப் பாஸ்மதி அரிசி சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மிதமான தீயில் இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான பாய் வீட்டு பால் புலாவ் தயார்.

திகட்டாத கல்யாண வீட்டு காரசாரமான வத்த குழம்பு! ரகசிய ரெசிபி!

இந்த புலாவ் அதிகப்படியான மசாலா கலவை இல்லாமல் எளிமையாக இருப்பதால் குழந்தைகள் முதல் அனைவரும் இதை விரும்பி சாப்பிடலாம்.

Exit mobile version