ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆக மொறு மொறு போண்டா சாப்பிட வேண்டுமா.. அப்போ ஒரு முறையாவது இந்த மைசூர் போண்டாவை நம்ம வீட்டில் ட்ரை பண்ணலாம் வாங்க!
தேவையான பொருட்கள்
மோர் – ஒரு கப்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 2
கருவேப்பிலை மற்றும் மல்லி இலை – கைப்பிடி அளவு
தேங்காய் துருவல் – இரண்டு தேக்கரண்டி
மைதா மாவு – ஒரு கப்
அரிசி மாவு – கால் கப்
உப்பு மற்றும் தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் முதலில் மோர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் சீரகம், நன்கு தட்டிய இஞ்சி, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் மல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த மாவு உளுந்த மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு நன்கு விடாமல் கலந்து கொடுக்க வேண்டும். பத்து நிமிடங்கள் இதை ஒரு ஓரமாக வைத்துவிட வேண்டும்.
சிக்கன் மஞ்சூரியன் உடன் போட்டி போடும் சுவையில் சைவ கோபி மஞ்சூரியன்! ரெசிபி இதோ…
பத்து நிமிடத்திற்கு பின் மாவில் சூடான எண்ணெய் அரைக் கப் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான மொரு மொரு மைசூர் போண்டா தயார்.