சிவக்க சிவக்க சிக்கன் 65 சாப்பிட்டு போர் அடிச்சுட்டா..  வாங்க கிரீன் கலர்ல சிக்கன் 65 சாப்பிடலாம்!

சிக்கன் 65 என்று சொன்னவுடனேயே நாங்கள் எச்சி ஊறும். அந்த அளவுக்கு சிக்கன் 65 அனைவருக்கும் பிடித்த அசைவ உணவுகளில் ஒன்று. அந்த சிக்கன் 65 தயாரிக்கும் பொழுது அதன் சிவப்பு நிறத்திற்காக பல ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இதை முற்றிலும் தவிர்த்து நாம் மல்லி, புதினா இலைகளை வைத்து பச்சை கலரில் சுவையான மற்றும் ஹெல்த்தியான சிக்கன் 65 செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கிலோ
மல்லி இலை , புதினா இலை – ஒரு கப்
கறிவேப்பிலை – ஒரு கப்
பச்சை மிளகாய் -3
வெள்ளை பூண்டு – 5
இஞ்சி – சிறிய துண்டு
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – கால் கப்
மைதா மாவு – அரை கப்
கான்பிளார் மாவு – அரை கப்
எலுமிச்சை பழம் – பாதி அளவு
மிளகு சீரகப்பொடி – இரண்டு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் சிக்கனை நன்கு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் கொடுக்கப்பட்டுள்ள மல்லி, புதினா, கருவேப்பிலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விழுதுகளை ஒரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். அதனுடன் கொடுக்கப்பட்டுள்ள அளவு மைதா மாவு, கான்பிளார் மாவு, அரிசி மாவு, கடலை மாவு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும். இப்பொழுது பாதி அளவு எலுமிச்சை பழத்தை பிழிந்து கிளற வேண்டும். இந்த கலவை கெட்டியாக இருக்க வேண்டும், தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.

மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் குண்டூர் ஸ்பெஷல் கார இட்லி ரெசிபி இதோ!

மாவு நன்கு கலந்து தயாரானதும் அதில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து கிளற வேண்டும். சிக்கனில் அனைத்து புறங்களிலும் இந்த மாவு பரவும் படி கிளறி கொடுக்க வேண்டும். மேலும் காரத்திற்காக மிளகு சீரகத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு பத்து முதல் 15 நிமிடங்கள் தனியாக ஊற வைக்க வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்கு சூடானதும் இந்த சிக்கனை ஒன்று ஒன்றாக சேர்த்து பொரித்தெடுக்க வேண்டும். இதில் காரத்திற்காக நாம் சிவப்பு மிளகாய், சிவப்பு மிளகாய் தூள் என எதுவும் சேர்க்கவில்லை. மேலும் சிவப்பு நிறம் வருவதற்காகவும் நாம் எந்தவித உணவுப் பொருட்களையும் சேர்க்கவில்லை. இயற்கையான முறையில் மல்லி, புதினா, கருவேப்பிலை கொண்டு சமைப்பதால் இந்த சிக்கன் சற்று பச்சையாகவே இருக்கும். மேலும் காரத்திற்கு பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி, பூண்டு. மிளகு , சீரகம் மட்டுமே சேர்த்துள்ளதால் இது சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.