சிக்கன் மஞ்சூரியன் உடன் போட்டி போடும் சுவையில் சைவ கோபி மஞ்சூரியன்! ரெசிபி இதோ…
கோபி மஞ்சூரியன் சைவப் பிரியர்களின் தலைசிறந்த உணவு வகைகளில் ஒன்று. பெரும்பாலும் ஹோட்டல்களில் மட்டுமே கிடைக்கும் இந்த கோபி மஞ்சூரியனை நம் வீட்டிலும் செய்து மகிழலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் – ஒரு கப்
அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி
மைதா மாவு – ஒரு தேக்கரண்டி
கான்பிளவர் மாவு – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய் – 2
வெங்காயம் – 2
குடைமிளகாய் – 1
சோயா சாஸ் – இரண்டு தேக்கரண்டி
டொமேட்டோ சாஸ் – இரண்டு தேக்கரண்டி
ஸ்பிரிங் ஆனியன் – கைப்பிடி அளவு
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் காலிஃப்ளவரை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடி துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நன்கு கொதிக்க வைத்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் சிறிதளவு உப்பு சேர்த்து நாம் நறுக்கி வைத்திருக்கும் காலிஃப்ளவரை அதில் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
10 நிமிடம் காலிபிளவர் அந்த கொதிக்கும் வெந்நீரில் மூழ்கி இருந்தால் போதுமானது. அதே நேரத்தில் மற்றொரு பாத்திரத்தில் கான்ப்பிளவர் மாவு, மைதா மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதில் நாம் வேக வைத்திருக்கும் காலிஃப்ளவரை சேர்த்து நன்கு விரைவில் கொள்ள வேண்டும்.
தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த காலிஃப்ளவரை மிதமான தீயில் எண்ணெயில் நன்கு பொரித்தெடுக்கவும். மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும். அதன் பின் பச்சை மிளகாய், வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்கு வளர்க்க வேண்டும்.
வெண்டைக்காய் வைத்து எப்பவும் காரக்குழம்பு, சாம்பார் தானா! நார்த் இந்தியன் ஸ்டைல் பிந்தி மசாலா!
இப்பொழுது சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். அடுத்ததாக சிறிதளவு கான்பிளார் மாவை தண்ணியுடன் கரைத்து மாவு பதத்திற்கு கலந்து இதில் ஊற்றிக் கொள்ளவும். இந்த பதத்தில் டொமேட்டோ சாஸ் மற்றும் சோயா சாஸ் கலந்து கொள்ளவும். அடுத்து இறுதியாக நாம் பொறித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை சேர்த்து கலந்து கொடுத்தால் சுவையான கோபி மஞ்சூரியன் தயார். இறுதியாக ஸ்ப்ரிங் ஆனியன் மேலே தூவி பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும்.