கச்சோரி செய்வதற்கு முதலில் மாவு தயார் செய்து கொள்ளலாம். இதற்காக ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு கப் மைதா மாவு, அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து முதலில் மாவை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
அதை அடுத்து சிறிது சிறிதாக வெந்நீர் கலந்து மாவை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவை சற்று கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். இறுக்கமாக பிசைந்த மாவை 10 முதல் 15 நிமிடம் அப்படியே மூடி போட்டு தனியாக வைத்து விடலாம்.
இந்த நேரத்தில் கச்சோரி உள்ளே வைப்பதற்கான பூரணம் தயார் செய்து கொள்ளலாம். ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி துருவிய இஞ்சி, அரை தேக்கரண்டி காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அடுத்ததாக ஒரு கப் வேக வைத்து மசித்த பச்சை பட்டாணி, மசித்த இரண்டு உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
இதற்காக அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், இரண்டு தேக்கரண்டி கறி மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது மாவை சிறிய வட்ட வடிவில் திரட்டி கொண்டு அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பூரணத்தை உள்ளே வைத்து கச்சோரி வடிவத்திற்கு உருட்ட வேண்டும்.
நினைத்தாலே நாவில் எச்சில் ஊறும் எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி! வாங்க செய்த அசத்தலாம்…
இப்பொழுது மற்றொரு கடாயில் பொறித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் கச்சோரிகளை சேர்த்து முன்னும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுக்க வேண்டும். மிதமான தீயில் அடுப்பை வைத்து கச்சொறியை பொரித்து எடுத்தால் நல்ல நிறத்தில் பொன்னிறமாக வரும்..
மாலை நேரங்களில் டீ மற்றும் காபி குடிக்கும் பொழுது எப்பொழுதும் வடை மற்றும் சம்சா சாப்பிடாமல் ஒரு முறை இது போன்ற சத்து நிறைந்த கச்சோரி செய்து வீட்டில் உள்ளவர்களை திருப்தி படுத்தலாம்.