சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு பொருத்தமான கீரை தொக்கு! காரசாரமான ரெசிபி இதோ!

மதிய வேலை சூடான சாதத்திற்கும், இரவு நேரம் மிருதுவான சப்பாத்திக்கும் பொருந்தும் வகையில் ஒரே சைடிஸ் செய்ய வேண்டுமா? இந்த ரெசிபி உங்களுக்கு தான்… மூன்று வேலையும் மூன்று விதமான குழம்புகள், காய்கள் வைத்து சிரமத்திற்கு உள்ளாகாமல் ஒரே அருமையான கீரை தொக்கு வைத்து அந்த நாளில் நம் குடும்பத்தினரை அசத்தலாம் வாங்க.

இந்த அருமையான கீரை தொக்கு செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் நான்காக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், ஒன்றரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள், இரண்டு தேக்கரண்டி மல்லித்தூள், ஒரு தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி சர்க்கரை, அரை தேக்கரண்டி உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக 10 முதல் 15 வெள்ளை பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெள்ளைப்பூண்டு பொன்னிறமாக மாறியதும் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை கொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கி தோல் உரிந்து வரும் பக்கத்தில் நாம் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் கலவையை சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது அரை தேக்கரண்டி உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து 5 முதல் 10 நிமிடங்கள் மூடி போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து பொடியாக நறுக்கிய ஒரு கட்டு பாலக்கீரை சேர்த்துக் கொள்ளலாம்.

பால் பாயாசம் சுவையில் அட்டகாசமான பாதாம் பிசின் பாயாசம்!

கடாயில் பாலக் கீரையை சேர்த்தபின் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம். தொடர்ந்து மூன்று முதல் நான்கு நிமிடங்கள் நன்கு மசாலாவுடன் கீரையை கலந்து கொடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான பாலக்கீரை தொக்கு தயார். இதை நாம் சூடான சாதம் மற்றும் சப்பாத்தியுடன் வைத்து சாப்பிடும் பொழுது சுவை மேலும் அருமையாக இருக்கும்.