வார இறுதி நாட்களில் பெரும்பாலோரின் விருப்பமான உணவாக சிக்கன் இருக்கும். இந்த சிக்கனை எப்போதும் போல அல்லாமல் சற்று வித்தியாசமாக ஈரோடு ஸ்பெஷல் சிக்கன் தண்ணி குழம்பாக ஒரு முறை வைத்து பாருங்கள். இந்த தண்ணி குழம்பு காலை இட்லி, தோசைக்கு, மதியம் சாதம், இரவு சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கும் கச்சித பொருத்தமாக இருக்கும். இந்த சிக்கன் தண்ணி குழம்பு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ..
இந்த சிக்கன் தண்ணி குழம்பு வைப்பதற்கு முதலில் வாசனையான பொடி தயார் செய்ய வேண்டும். ஒரு கடாயில் ஒரு துண்டு பட்டை, 3 லவங்கம், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, வாரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் பத்து காய்ந்த வத்தல், ஒரு தேக்கரண்டி அரிசி, ஒன்றை தேக்கரண்டி தனியா, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த இந்த பொருட்களை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி சிறிது நேரம் மாறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக பொடி செய்து கொள்ளவும் . அடுத்ததாக அதே கடாயில் அரை தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு கப் சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுதாக சேர்த்து வதக்க வேண்டும்.
சின்ன வெங்காயம் பாதி வதங்கியதும் கைப்பிடி அளவு கருவேப்பிலை, கைப்பிடி அளவு தேங்காய் சேர்த்து பொன்னிறமாக பழகிக் கொள்ளவும். வதக்கிய இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரிற்கு மாற்றிக் கொள்ளவும். அதனுடன் முதலில் அரைத்த கொடியையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு சிறிய துண்டு இஞ்சி, 5 பல் வெள்ளைப் பூண்டு இவற்றை தட்டி சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டு எண்ணெயுடன் சேர்ந்து வதங்கும் நேரத்தில் அரைக்கிலோ சிக்கனை நன்கு மஞ்சள் தூள் சேர்த்து கழுவிக்கொள்ளவும். சிக்கனை கடாயில் சேர்த்து வதக்க வேண்டும்.
இப்பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா சேர்த்து சிக்கனில் நன்கு கலந்து கொடுக்க வேண்டும். அதன் பின் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.குழம்பிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடங்கள் குழம்பை கொதிக்க வைக்க வேண்டும்.
வித்தியாசமாக சட்னி சாப்பிட ஆசையா? சம்மர் ஸ்பெஷல் வெள்ளரிக்காய் சட்னி!
குழம்பு நன்கு கொதித்து வரும் நேரங்களில் நாம் முதலில் வறுத்து அரைத்த கொடியை சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது கடாயில் ஓரங்களில் எண்ணை பிரிந்து வந்தால் குழம்பு தயாராக மாறியுள்ளது. இப்பொழுது இந்த குழம்பிற்கு எண்ணெய் மற்றும் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளலாம். இறுதியாக பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி பரிமாறினால் ஈரோடு ஸ்பெஷல் சிக்கன் தண்ணி குழம்பு தயார்.