குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் எலும்புகளையும் பலப்படுத்தும் ராகி சூப்!

மாலை வேலைகளில் வழக்கமான டீ, காபிக்கு பதிலாக வித்தியாசமாக குடிக்க வேண்டும் என தோன்றும் நேரங்களில் ராகி மாவு வைத்து இந்த சூப் செய்து பாருங்கள். சுவையில் அருமையாக இருக்கும் இந்த சூப் குழந்தைகள் முதல் பெரியவர்களின் எலும்பு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். காய்கறிகளை பயன்படுத்தி எளிமையாக வீட்டிலேயே பத்து நிமிடத்தில் இந்த சூப்பை செய்துவிடலாம்.. அதற்கான அசத்தல் ரெசிபி இதோ.

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து கரைந்ததும் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும், அதனுடன் துருவிய ஒரு கேரட், இப்படியாக நறுக்கிய பீன்ஸ், துருவிய ஒரு கப் முட்டைகோஸ் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

காய்கறிகள் வெண்ணெயுடன் வதங்கும் நேரத்தில் இரண்டு பல் வெள்ளை பூண்டுவை நன்கு இடித்து சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது சூப் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்க வேண்டும். காய்கறிகள் குறைந்தது ஐந்து நிமிடங்கள் வரை வேக வேண்டும். அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவைத்து கொள்ளவும்.

அந்த நேரத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி ராகி மாவு, தண்ணீர் சேர்த்து கட்டிகள் விழாக வண்ணம் கரைத்து எடுத்துக் கொள்ளவும். காய்கறிகள் வந்ததும் நாம் கரைத்து வைத்திருக்கும் ராகி கலவையை அதனுடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

தலைமுடி அடர்த்தியாக கருகருவென நீண்டு வளர வேண்டுமா? வாங்க கருவேப்பிலை தொக்கு தயார் பண்ணலாம்!

ராகி மாவை காய்கறிகளுடன் சேர்த்ததும் கைவிடாமல் தொடர்ந்து கிளற வேண்டும். இல்லையென்றால் ராகி மாவு கரைசல் சிறு கட்டிகளாக மாறிவிடும். ஐந்திலிருந்து எட்டு நிமிடங்கள் வரை ராகி மாவு கொதிக்க வேண்டும். எட்டு நிமிடங்கள் கழித்து சூப் கெட்டியாக மாறி வரும். அப்பொழுது அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது இறுதியாக பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி படிப்பாரினம் சுவையான ராகி சூப் தயார்.

Exit mobile version