குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட் அல்வா!

உடலுக்கு பல சத்துக்கள் தரக்கூடிய பீட்ரூட் சில குழந்தைகளுக்கு பிடிக்காது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இந்த பீட்ரூட்டை வைத்து அல்வா செய்து கொடுத்துப் பாருங்கள் தித்திக்கும் சுவையில் மயங்கி மீண்டும் மீண்டும் சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

நெய் – மூன்று தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு – பத்து முதல் 15
பீட்ரூட் – ஒரு கப்
சர்க்கரை – கால் கப்
பால் – ஒரு கப்
ஏலக்காய் தூள் – அரை தேக்கரண்டி

செய்முறை

ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும். மீதமுள்ள நெய்யில் நாம் நன்கு கழுவி சுத்தம் செய்து துருவி வைத்திருக்கும் பீட்ரூட் துருவல்களை அந்த நெய்யுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின் ஒரு கப் பீட்ரூட்டிற்கு இரண்டு கப் தண்ணீர் ஒரு கப் பால் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

பஞ்சாபி ஸ்டைல் டேஸ்டான ராஜ்மா மசாலா.. சாப்பிட ஆசையா? அப்போ ரெசிபி இதோ!

பீட்ரூட் நன்கு வந்ததும் அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். இப்பொழுது இறுதியாக வாசனைக்கு மற்றும் சுவைக்கு ஏற்ப கூடுதலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான பீட்ரூட் அல்வா தயார்.

Exit mobile version