குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கைக் கீரை கடையல்!

நம் வீடுகளில் எளிமையாக வளரும் முருங்கைக் கீரையில் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இந்த கீரையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொள்ளும் பொழுது நம் உடம்பில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இந்த முருங்கைக் கீரையை வைத்து புதுவிதமாக முருங்கைக்கீரை கடையல் செய்து சாப்பிடலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – அரை கப்
பெருங்காய பொடி – 2 சிட்டிகை
பூண்டு – 10 பல்
சோம்பு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுந்து – அரை தேக்கரண்டி
வெங்காயம் – 10 முதல் 20
பச்சை மிளகாய் – 4
கறி வேப்பிலை – கைப்பிடி அளவு
நல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

செய்முறை

முதலில் ஒரு குக்கரின் அரை கப் துவரம் பருப்பை இரண்டு முறை கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு பல் பூண்டு சேர்த்து வேக வைக்க வேண்டும். துவரம் பருப்பு மையாக வேக வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுந்து, சோம்பு, சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும். அடுத்து அதில் வெங்காயம், பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வாசனைக்காக கறிவேப்பிலை சேர்த்து கொள்ளலாம். நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கை கீரையை சேர்த்து கொள்ளலாம். முருங்கை கீரை எண்ணையில் சேர்ந்து வேகும் வரை கிளறி கொடுக்க வேண்டும். இப்போதே கீரை பாதி வெந்து விடும்.

திருச்செந்தூர் முருகன் கோவில் நெய்வேத்திய பிரசாதம்!  வாங்க நம்ம வீட்லையும் ட்ரை பண்ணலாம்..

அடுத்ததாக இதில் நாம் வேக வைத்திருக்கும் துவரம் பருப்பை சேர்த்து கொள்ள வேண்டும். நன்கு அதை கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது தேவைக்கு ஏற்ப உப்பு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை 5 நிமிடம் சூடேற்ற வேண்டும். அதன் பின் அடுப்பை அனைத்து விடலாம்.

10 நிமிடங்கள் கழித்து மிதமான சூட்டில் இந்த பருப்பு கலவையை கடைந்து எடுத்து கொள்ள வேண்டும். மையாக கடைய வேண்டாம். பாதி பாதி கீரை தெரியும் அளவிற்கு இருந்தால் போதுமானது. இப்பொழுது முருங்கை கீரை கடையல் தயார்.

Exit mobile version