கிராமத்து ஸ்டைல் காரசாரமான நெத்திலி மீன் குழம்பு!

மீன் குழம்பு என்றாலே நெத்திலி மீன் தான். அந்த அளவிற்கு இந்த மீன் குழம்பிற்கு தனி சுவையும் உள்ளது. நாவில் எச்சில் ஊரும் இந்த நெத்திலி மீன் குழம்பு செய்வதற்கான அருமையான ரெசிபி இதோ!
முதலில் இந்த குழம்பு செய்வதற்கு ஒரு மசாலா தயார் செய்ய வேண்டும். ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் 10 முதல் 15 தோல் உரித்த சின்ன வெங்காயம் மற்றும் ஐந்து பல் வெள்ளை பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ளவும். பாதி அளவு வழங்கியதும் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து இரண்டு தேக்கரண்டி மல்லித்தூள், இரண்டு தேக்கரண்டி மிளகாய் தூள், தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மசாலா வாசனை செல்லும் வரை எண்ணையோடு சேர்த்து வதக்க வேண்டும்.

அதன் பின் அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து விடவும். நன்கு வதக்கிய எந்த பொருட்களை பத்து நிமிடங்கள் வரை ஆரம்பித்து ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.. அடுத்ததாக கடாயின் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, தேக்கரண்டி வெந்தயம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

கடுகு நன்கு பொறிந்ததும் பொடியாக நறுக்கிய 20 சின்ன வெங்காயம், ஐந்து பல் வெள்ளை பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பாதி அளவு வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் நாம் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை சேர்த்து வதக்க வேண்டும். மிதமான தீயில் ஒரு நிமிடங்கள் வரை இந்த மசாலாவை வதக்க வேண்டும்.

அதன் பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். மசாலா கலவையிலிருந்து நன்கு கொதித்து வந்ததும் ஒரு எலுமிச்சை பழ அளவு புளியை ஊறவைத்து அதன் சாற்றை மட்டும் சேர்த்துக் கொள்ளவும். இந்த நேரத்தில் குழம்பிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இப்போது இந்த கலவையை நன்கு கலந்து மிதமான தீயில் பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் சத்துக்கு பஞ்சமில்லாத வெள்ளை பூசணி வைத்து குளுகுளு மோர் குழம்பு!

பத்து நிமிடங்கள் கழித்து நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் நெத்திலி மீனை கலந்து ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். ஏழு நிமிடங்கள் கழித்து கைப்பிடி அளவு மல்லி இலை தூவி இறக்கினால் ஒரே மண மணக்கும் நெத்திலி மீன் குழம்பு தயார்.

Exit mobile version