தண்ணீர் சத்துக்கு பஞ்சமில்லாத வெள்ளை பூசணி வைத்து குளுகுளு மோர் குழம்பு!

நாள் ஒன்றிற்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் ஆவது நம் உடலுக்கு தேவைப்படுகிறது. அதிலும் இப்பொழுது வெயில் காலம் தொடங்கிவிட்டது, அதிகப்படியான தண்ணீர் தேவை நம் உடலுக்கு ஏற்படுகிறது. நேரத்திற்கு நேரம் தண்ணீர் குடிப்பது மட்டுமின்றி நம் உணவில் நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை சேர்க்கும் பொழுது உடல் உஷ்ணத்தை குறைக்க முடியும். அந்த வகையில் வெள்ளை பூசணி வைத்து சுவையான மோர்குழம்பு செய்யலாம் வாங்க.

இந்த மோர் குழம்பு செய்வதற்கு முதலில் 250 கிராம் அளவுள்ள வெள்ளை பூசணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்கு கழுவி சுத்தம் செய்து தோள்களை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய இந்த வெள்ளை பூசணி அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், அரை தேக்கரண்டி உப்பு, ஒன்றரை தமிழர் தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

எட்டில் இருந்து பத்து நிமிடங்கள் ஆவது வெள்ளை பூசணி வேக வேண்டும். காய் வெந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் கைப்பிடி அளவு தேங்காய், 3 பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஒரு தேக்கரண்டி சீரகம் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பந்தியில் பரிமாறப்படும் இன்ஸ்டன்டான பச்சை மாங்காய் ஊறுகாய்! ரெசிபி இதோ…

பத்து நிமிடங்கள் பூசணிக்காய் நன்கு வந்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதுவை அதனுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது மற்றொரு கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி சீரகம், கருவேப்பிலை, காய்ந்த வத்தல் 2, சின்ன வெங்காயம் ஐந்து முதல் பத்து பொடியாக நறுக்கியது, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

இந்த தாளிசத்தை பூசணிக்காய் கொதிக்கும் கலவையுடன் சேர்த்து கிளறி கொடுத்து அடுப்பை அணைத்து விடலாம். குழம்பு சூடு ஆறியதும் ஒரு கப் கெட்டியான தயிரை மிக்ஸியில் சேர்த்து நன்கு அடித்து குழம்பினுள் ஊற்றி, கைப்பிடி அளவு மல்லி இலை தூவி கலந்து கொடுத்தால் குளுகுளு மோர் குழம்பு தயார்.

Exit mobile version