நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொடுப்பதில் காலை உணவு தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது. காலை உணவாக நீராவியில் வேகவைத்த உணவை எடுத்துக் கொள்ளும் பொழுது கலோரி குறைவாகவும் ஊட்டச்சத்து மிகுதியாகவும் அமைந்து உடலுக்கு நல்ல சுறுசுறுப்பை கொடுக்கிறது. அந்த வகையில் சத்து நிறைந்த ஒட்ஸ் வைத்து சுவையான இட்லி ரெசிபி செய்யலாம் வாங்க.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கப் சேர்த்து நான்கு நிமிடங்கள் வரை வறுத்து கொள்ளவும். அடுத்ததாக அதை கப்பிற்கு ஒரு கப் சம்பா ரவை சேர்த்து நான்கு நிமிடங்கள் தொடர்ந்து வறுக்க வேண்டும். வறுத்த இந்த பொருட்களை ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிட வேண்டும். வறுத்த பொருட்களின் சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பரபரவென அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி கடலை பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, துருவிய கேரட், ஐந்து முதல் பத்து முந்திரி பருப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். காய்கறிகள் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
வதக்கிய இந்த பொருட்கள் சூடு ஆறியதும் நாம் வறுத்து பொடி செய்து வைத்திருக்கும் ஓட்ஸ் ரவாயை இதில் கலந்து கொள்ளவும். அடுத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, உப்பு, ஒரு கப் தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். 10 முதல் 15 நிமிடங்கள் இந்த மாவை ஒரு ஓரமாக வைத்து விடவும்.
தினமும் சாம்பார், ரசம் தானா! வாங்க வித்தியாசமாக பருப்பு வடை குழம்பு செய்து அசத்தலாம்!
இப்பொழுது ஓட்ஸ் இட்லி செய்வதற்கு மாவு தயாராக உள்ளது. இட்லி பாத்திரத்தில் இந்த மாவை ஏழு முதல் 10 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தால் ஓட்ஸ் இட்லி தயார். ஹெல்த்தியான இந்த ஓட்ஸ் இட்லியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் காலை உணவாக எடுத்து வரும் பொழுது உடலில் சுறுசுறுப்பு அதிகரித்து நல்ல வளர்ச்சி மாற்றத்தை பார்க்க முடியும்.