காஞ்சிபுரம் இட்லிக்கு மட்டும் இல்ல… ரவா தோசை, காரச் சட்னிக்கும் ஸ்பெஷல் தான்!

காஞ்சிபுரம் என்று சொன்னவுடன் நம் மனதில் முதலில் நினைவிற்கு வருவது இட்லி தான். காஞ்சிபுரம் இட்லி அவ்வளவு ருசியாக இருக்கும். ஆனால் காஞ்சிபுரத்தில் இட்லி மட்டும் சிறப்பு இல்லை, இட்லிக்கு இணையாக காஞ்சிபுரம் ரவா தோசை மிகவும் ஃபேமஸ் தான். ஒருமுறையாவது நாம் இந்த காஞ்சிபுரம் ரவா தோசை நம் வீட்டில் செய்து மகிழலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

ரவை – ஒரு கப்
அரிசி மாவு – முக்கால் கப்
மைதா அல்லது கோதுமை மாவு- அரை கப்
மிளகாய் – 1
இஞ்சி – சிறிய துண்டு
மிளகு – 10
சீரகம்- ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 5 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – ஐந்து கப்
காரச் சட்னி செய்ய தேவையான பொருட்கள்
சாய்ந்த வத்தல் – 10
புலி – சிறிதளவு
வெள்ளை பூண்டு – 5
பொறிகடலை – இரண்டு தேக்கரண்டி
மல்லி – ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ரவை, அரிசி மாவு, மைதா அல்லது கோதுமை மாவு அனைத்தையும் ஒரே பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

ஒரு கப் ரவைக்கு 4 கப் தண்ணீர் சேர்த்தால் போதுமானதாக இருக்கும். நான்கு கப் தண்ணீர் சேர்த்து இந்த கலவையை நன்கு கரைத்து 15 நிமிடங்கள் ஒரு ஓரமாக வைத்து விடவும்.

காரச் சட்னி செய்வதற்கு முதலில் காய்ந்த வத்தலை அரை மணி நேரத்திற்கு முன்பாக நீரில் ஊற வைக்க வேண்டும். அதுடன் சேர்த்து சிறிதளவு புளியையும் ஊற வைக்க வேண்டும். அதன் பின் புளி மற்றும் வத்தல், பொரிகடலை, மல்லி, வெள்ளைப் பூண்டு, கருவேப்பிலை பொரிகடலை சிறிதளவு உப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் தோசைக்கல் வைத்து நன்கு சூடானதும் அதில் ரவா மாவை நாம் மெல்லியதாக ஊற்ற வேண்டும். கல் நன்கு சூடாக இருக்கும் பொழுது மட்டுமே நாம் தோசையை ஊற்ற வேண்டும். தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளலாம். அதன் பின் தோசை ஒருபுறம் நன்கு வெந்ததும் அதன் மேல் நாம் தயார் செய்து வைத்திருக்கும் காரச்சட்னிகளை மெலிதாக பரப்ப வேண்டும்.

மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் குண்டூர் ஸ்பெஷல் கார இட்லி ரெசிபி இதோ!

இப்பொழுது தோசையை இரண்டு புறமும் மடித்தால் சூடான மற்றும் டேஸ்ட்டான ரவா தோசை தயார். இதில் தேவைப்பட்டால் உருளைக்கிழங்கு மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.