கறி குழம்பு சுவையில் சேப்பங்கிழங்கு வைத்து காரசாரமான குழம்பு செய்யலாம் வாங்க. அசத்தலான சேப்பங்கிழங்கு குழம்பு ரெசிபி இதோ!
முதலில் ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி சோம்பு, ஒரு தேக்கரண்டி மிளகு சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும். அடுத்ததாக இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் இந்த பொருட்களை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றி ஆரவைத்து விடவும். வதக்கிய பொருட்கள் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சேர்த்து சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்து 10 முதல் 15 வெள்ளைப் பூண்டுகளை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் கைப்பிடி அளவு கருவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தக்காளி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது தக்காளி நன்கு வதங்கியதும் ஒரு கப் சேப்பங்கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்து அதன் தோள்களை நீக்கி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய சேப்பங்கிழங்கை தக்காளி வதங்கியதும் குக்கரில் சேர்த்து வதக்க வேண்டும்.
வெயில் காலம் தொடங்கியாச்சு… குளுகுளுன்னு இளநீர் வைத்து ஃபலூடா செய்யலாம் வாங்க!
அதன் பின் அரை தேக்கரண்டி மஞ்சள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியாத்தூள், 2 தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் சேர்த்து எண்ணையுடன் நன்கு வதக்க வேண்டும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து நாம் முன்னதாக அரைத்த தக்காளி வெங்காய மசாலாவை சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது குழம்பிற்கு தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் இரண்டு விசில்கள் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது சுவையான சேப்பக்கிழங்கு காரக்குழம்பு தயார். இறுதியாக பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி பரிமாறினால் சுவை மேலும் அருமையாக இருக்கும்.