வீட்டில் எந்த காய்கறியும் பெரிதாக இல்லாத பொழுது மிளகு குழம்பு ஒன்று வைத்து பாருங்கள். ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாத இந்த மிளகு குழம்பு சுவையிலும் அருமையாக இருக்கும். மேலும் இந்த மிளகு குழம்பு உடல் அசதி, அஜீரணக் கோளாறு, சளி தொல்லை என அனைத்திற்கும் ஒரு சிறந்த அருமருந்தாக அமைகிறது. க்கான எளிமையான ரெசிபி இதோ!
முதலில் இந்த மிளகு குழம்பு செய்வதற்கு ஒரு பொடி தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி வெந்தயம், இரண்டு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மல்லி, 10 முதல் 15 காய்ந்த வத்தல் , கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வறுத்த இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக மாற்றிக் கொள்ளவும். அதே கடாயில் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். கடுகு நன்கு புரிந்ததும் 20 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் 10 பல் பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். நன்கு பழுத்த இரண்டு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் , ஒரு தேக்கரண்டி நாம் அரைத்து வைத்திருக்கும் பொடி சேர்த்து நன்கு எண்ணெயுடன் வதக்க வேண்டும்.
ஐந்தே நிமிடத்தில் டேஸ்டான, மிருதுவான பிரட் புட்டிங்! குழந்தைகளுக்கு பிடித்தமான ரெசிபி இதோ!
மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு எலுமிச்சை பழ அளவு புளியை ஊறவைத்து அதன் தண்ணீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து மீண்டும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். மிதமான தீயில் இந்த குழம்பை 10 முதல் 15 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்தால் குழம்பு தயாராக மாறிவிட்டது. இப்பொழுது அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் மற்றும் சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கினால் மிளகு குழம்பு தயார்.