ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத காரசாரமான இறால் ஊறுகாய்! சைடிஷ்க்கு இனி பஞ்சமே இல்லை!

நினைத்த நேரம் எல்லாம் அசைவம் சாப்பிட வேண்டுமா? அப்பொழுது இறால் அதிகமாக கிடைக்கும் பொழுது இதுபோன்று ஊறுகாய் செய்து வைத்துவிட்டால் எந்த வகையான குழம்பு செய்தாலும் அதற்கு சைடிஷ் ஆக இந்த ஊறுகாய் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும். காரசாரம் மற்றும் புளிப்பு மிகுந்த இறால் ஊறுகாய் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.

இந்த ஊறுகாய் செய்வதற்கு முதலில் அரை கிலோ இறால் வாங்கி நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து விரைவில் கொள்ளவும். இதை மிதமான தீயில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பாதி வேகம் அளவிற்கு பொரித்து எடுத்துக் கொள்ளவும். இறால் பொன்னிறமாக வேக வேண்டிய அவசியம் இல்லை.

பொறித்த இறால் வைத்து ஊறுகாய் செய்யும் பொழுது சுவை சற்று கூடுதலாக இருக்கும். அடுத்து அதே கடாயில் மீதம் இருக்கும் எண்ணெயில் ஒரு தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் ஒரு தேக்கரண்டி பொடியாக நறுக்கிய வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

இஞ்சி மற்றும் வெள்ளைப்பூண்டு எண்ணெயில் நன்கு பொரிந்ததும் இரண்டு தேக்கரண்டி காஷ்மீரின் மிளகாய் தூளை எண்ணையுடன் சேர்க்க வேண்டும். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி நன்கு வறுத்து அரைத்த வெந்தயம் மற்றும் கடுகு பொடியை அதில் சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். மசாலாக்கள் பச்சை வாசனை செல்லும் வரை எண்ணையுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

அதன் பின் நம் எண்ணையில் பொரித்து வைத்திருக்கும் இறாலை இந்த மசால் கலவையுடன் சேர்த்து கலக்க வேண்டும். இப்பொழுது ஒரு எலுமிச்சை பழ அளவு புளியை ஊறவைத்து அதன் தண்ணீரை கரைத்து இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக வீட்டில் வினிகர் இருந்தால் அது கூட சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொண்டு மிதமான தீயில் இந்த ஊர்காவை தயார் செய்ய வேண்டும்.

Garlic Pickle Recipe in Tamil 1

வாய்வுத் தொல்லை பிரச்சினையா? பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாத பூண்டு பொடி!

ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கொதித்து வரும் பொழுது கடாயின் ஓரங்களில் எண்ணை பிரிந்து வந்தால் ஊறுகாய் தற்பொழுது தயாராகிவிட்டது. இந்த ஊறுகாயை கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்தால் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது.

இனி நம் வீடுகளில் எந்த வகையான குழம்பு மற்றும் தயிர் சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் என என்ன சாதம் வைத்திருந்தாலும் இந்த இறால் ஊறுகாய் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.