வீடுகளில் இட்லி மாவு இல்லாத சமயங்களில் புதுவிதமான ரெசிபி செய்து அசத்த நினைப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். ஒரு கப் அரிசி மாவு வைத்து அக்கி ரொட்டியும் சைடிஷ் ஆக காரமான சட்னி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஐந்து நிமிடத்தில் தயாராகும் இந்த ரெசிபி காலை மற்றும் மாலை வேலைகளில் எளிமையாக உணவாகவும் சுவையானதாகவும் மாறிவிடும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய 10 முதல் 15 சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கைப்பிடி அளவு மல்லி மற்றும் கருவேப்பிலை, இரண்டு தேக்கரண்டி துருவிய கேரட், ஒரு சிறிய துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது அல்லது தட்டி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதனுடன் ஒரு கப் தேங்காய் துருவல், அரை தேக்கரண்டி சீரகம், கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது இந்த மாவில் கை பொறுக்கும் அளவு சூட்டில் வெந்நீர் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு செய்து கொள்ள வேண்டும். மாவு சற்று தண்ணியாக மாறிவிட்டால் கூடுதலாக அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்கு கெட்டியாக மாவு பிசைந்து வைத்துக் கொள்ளலாம். மாவு பிசையும் பொழுது தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து உசைந்தால் வாசனையாக இருக்கும். இப்பொழுது ரொட்டிக்கு மாவு தயாராக உள்ளது. தோசை கல்லை அடுப்பில் வைத்து மிதமாக சூடு படுத்தி நாம் கலந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாவை தோசை கல்லில் வைத்து தோசை வடிவில் பரப்பிக் கொள்ள வேண்டும். அதன் பின் நெய் சேர்த்து முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து ரொட்டி செய்யும் பொழுது சற்று வாசனை கூடுதலாக இருக்கும். இப்பொழுது சுவையான அக்கிரொட்டி தயார்.
இந்த ரொட்டிக்கு சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிட காரமான சட்னி ஒன்று தயார் செய்யலாம் வாங்க. ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு கண்ணாடி பதத்தில் வதங்கியதும் இரண்டு தக்காளி பழம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
வந்தாச்சு… விநாயகர் சதுர்த்தி…. வாங்க சிலோன் ஸ்பெஷல் பெட்டிக்கு கொழுக்கட்டை செய்வதற்கான ரெசிபி!
தக்காளி பழம் நன்கு வதங்கியதும் நம் காரத்திற்கு ஏற்ப தனி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளலாம். மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளவும். இறுதியாக அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்தால் சட்னி தயார். அக்கிரொட்டியும் சட்னியும் ஐந்தே நிமிடத்தில் தயார் செய்து முடித்து விடலாம். எளிமையான இந்த ரொட்டி தேங்காய்ப்பூ சேர்த்ததால் சுவையானதாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.