எலும்புகளுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய கருப்பு உளுந்து துவையல்!

நம் வீடுகளில் உள்ள பெரியவர்களுக்கு மூட்டு வலி, கை கால் வலி, முதுகு வலி என பல வழிகள் இருக்கும். அதற்கு காரணம் எலும்புகளின் தேய்மானம் மற்றும் சத்துக் குறைபாடு. வயது அதிகரிக்க அதிகரிக்க இது போன்ற குறைபாடுகளால் பெரியவர்கள் வழியில் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். மேலும் இந்த காலத்தில் பல இளம் தலைமுறையினருக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. இதை ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடும் பொழுது சரி செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் கருப்பு உளுந்து நம் எலும்புகளுக்கு மிகவும் சக்தி அளிக்கக்கூடிய உணவு வகைகளில் நன்றாக உள்ளது. இதை வைத்து இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கு பொருந்தும் வகையான துவையல் செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 15
தக்காளி -2
வத்தல் – 6
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
கருப்பு உளுந்து – மூன்று தேக்கரண்டி
புளி – சிறு துண்டு
தேங்காய் – கால் கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கிக் கொள்ளவும். அதில் காய்ந்த வத்தல் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். அதன் பின் கருப்பு உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விடவும். அதன் பின் அதே கடாயில் தக்காளி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கிளறி வதக்க வேண்டும்.

 இரண்டு நாள் ஆனாலும் கெட்டுப் போகாத கிராமத்து ஸ்டைல் சுண்ட வத்தக் குழம்பு!

இறுதியாக இதில் கால் கப் தேங்காய் மற்றும் புளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதக்கிய பொருட்களை ஓரமாக ஆறவிட வேண்டும். அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்து கலவைகளையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த துவையல் சற்று பரபரவென அரைக்க வேண்டும் மையாக அரைத்தால் சுவையாக இருக்காது.