முட்டை வைத்து சாதம் தயார் செய்யும் பொழுது காரத்திற்காக காய்ந்த வத்தல், வத்தல் பொடி, மசாலா பொடி சேர்க்கும் பொழுது சாதம் சற்று நேரம் மாறி சிவப்பு நிறத்தில் தோன்றும். மேலும் கரம் சேர்க்கும் பொழுது மட்டுமே காரசாரமாக முட்டை சாதம் சுவையாகவும் இருக்கும். இந்த முறை சிவப்பு நிறத்திற்கு பதிலாக பச்சை நிறத்தில் முட்டை சாதம் புதிதாக மசாலா அரைத்து செய்யலாம் வாங்க. பச்சை நிற முட்டை சாதம் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 10 சின்ன வெங்காயம், காரத்திற்கு ஏற்ப பச்சமிளகாய் 3, ஐந்து பல் வெள்ளை பூண்டு, கைப்பிடி அளவு கறிவேப்பிலை, கைப்பிடி அளவு புதினா இலைகள் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது நெய் சேர்த்துக்கொள்ளலாம். எண்ணெய் சேர்த்து சூடான பிறகு நாம் அரைத்து வைத்து இருக்கும் மசாலாக்களை சேர்த்துக் கொள்ளலாம்.
எண்ணெயோடு மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இதில் அரை தேக்கரண்டி மஞ்சள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
பத்தே நிமிடத்தில் வெண்டைக்காய் வைத்து அருமையான முட்டை பொடிமாஸ்!
மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் நமக்கு தேவையான முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளலாம். முட்டை சேர்த்த பிறகு நன்கு கலந்து கொள்ள வேண்டும். முட்டை பொடிமாஸ் ரெடியானதும் அடுப்பை அணைத்து விடலாம்.
இதன் பிறகு நாம் வடித்து ஆற வைத்திருக்கும் சாதத்தை சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை கலந்து கொள்ளலாம். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான பச்சை முட்டை சாதம் தயார். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு குழந்தைகளுக்கு இந்த முட்டை சாதம் சிறந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக இருக்கும்.