எப்பவும் சிக்கன் ப்ரைட் ரைஸ், எக் பிரைடு ரைஸ் தானா? வாங்க கனவா ஃப்ரைட் ரைஸ் ட்ரை பண்ணலாம்!

ஒரே மாதிரியான சிக்கன் ப்ரைட் ரைஸ், எக் ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு சலித்து விட்டதா? அப்பொழுது ஒரு முறையாவது கனவா வைத்து ப்ரைட் ரைஸ் செய்து சாப்பிட்டு பாருங்கள். சுவை நாக்கை விட்டு அகலமல் அப்படியே இருக்கும். கனவா ப்ரைட் ரைஸ் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ..

முதலில் கனவா ப்ரைட் ரைஸ் செய்வதற்கு அரை கிலோ கனவா வாங்கி நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் கனவா மீன்களை பொறித்து எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளவும். முட்டையை நன்கு எண்ணெயுடன் சேர்த்து வறுத்து கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பாதி அளவு வதங்கியதும் அதில் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.

இஞ்சி மற்றும் பூண்டின் பச்சை வாசனை சென்றவுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கால் கப் கேரட் துருவல், கால் முட்டைக்கோஸ் துருவல் சேர்த்து வதக்க வேண்டும்.

காரசாரமான மசாலாக்கள் எதுவும் இல்லாமல் எளிமையான முறையில் நொடியில் தயாராகும் சிந்தாமணி சிக்கன்!

இப்பொழுது காய்கறிகளுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொடுத்து கடாயை இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். அதன்பின் நாம் புரிந்து வைத்திருக்கும் கணவாய் மீன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக நாம் முக்கால் பாகம் வேக வைத்திருக்கும் பாஸ்மதி அரிசி ஒரு கப் சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். அடுத்து ஒரு கப் சோயா சாஸ், ஒரு தேக்கரண்டி மிளகு சீரகத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். தேவைப்பட்டால் சுவைக்கு ஏற்ப சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது சுவையான கனவா மீன் பிரைட் ரைஸ் தயார்.