ஈவினிங் ஸ்னாக்ஸ்.. பைனாப்பிள் ராகி அப்பம்…. ட்ரை பண்ணலாமா!

பள்ளி, கல்லூரி முடித்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் டீ, காபியுடன் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என அசை இருக்கும். அந்த ஸ்னாக்ஸ் சத்தானதாகவும், சுவையானதாகவும் இருந்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் ராகி மாவு வைத்து பைனாப்பிள் அப்பம் ஒன்று செய்யலாம்.

தேவையான பொருட்கள்

பைனாப்பிள் – ஒரு கப்
வெல்லம் – அரை கப்
தேங்காய் – அரை கப்
ஏலக்காய் தூள் – அரை தேக்கரண்டி
நெய் – இரண்டு தேக்கரண்டி
ராகி மாவு – ஒன்றரைக் கப்
உப்பு – இரண்டு சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயில் ராகி மாவை சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு உப்பு, நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதில் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். இறுக்கமாக அல்லாமல் சற்று இலகுவாக பிசைந்து செய்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக அதை கடாயில் வெல்லம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும். வெல்லம் நன்கு கரைந்ததும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பைனாப்பிள்களை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவல்களை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

டேஸ்டான ஊத்தப்பம் சாப்பிட ஆசையா? பாம்பே ஸ்டைல் பன்னீர் ஊத்தப்பம் ரெசிபி இதோ!

ராகி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு வாழை இலையில் வைத்து சிறிய வட்டமாக பறக்க வேண்டும். அதன் மையத்தில் வெள்ளத்துடன் சேர்த்த பைனாப்பிள் கலவையை வைத்து மடிக்க வேண்டும். இப்படி ராகி மாவு முழுவதும் பூரணத்தை உள்ளே வைத்து நன்கு மடித்து எடுத்துக் கொள்ளலாம்.
இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் இந்த ராகி மாவை 10 முதல் 15 நிமிடங்கள் நன்கு வேக வைக்க வேண்டும். இப்பொழுது நமக்கு சுவையான ராககி பைனாப்பிள் அப்பம் தயார்.

Exit mobile version