இரும்புச்சத்து அதிகரிக்கும் முருங்கை கீரை வைத்து முருங்கைக்கீரை முட்டை பொடிமாஸ்!

உடலில் இரும்பு சத்து அதிகரிக்க வாரத்திற்கு குறைந்தது இரண்டு மூன்று முறையாவது முருங்கைக்கீரையை நாம் உணவில் சேர்த்து வர வேண்டும். முருங்கைக்கீரை பிடிக்காத குழந்தைகளுக்கு முட்டையை முருங்கைக்கீரையுடன் சேர்த்து முருங்கைக்கீரை முட்டை பொடிமாஸ் செய்து கொடுத்து பாருங்கள். மீண்டும் வேண்டும் என கேட்கும் அளவிற்கு சுவை அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை – இரண்டு கப்
முட்டை – மூன்று
சின்ன வெங்காயம் – 15 -20
பச்சை மிளகாய் -3
கடுகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும். அதில் அடுத்ததாக சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும். இப்பொழுது நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கைக்கீரை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ஒரு அரை டம்ளர் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து முருங்கைக்கீரையை கலந்து கொடுத்து வேக வைக்க வேண்டும்.

சிக்கன் மஞ்சூரியன் உடன் போட்டி போடும் சுவையில் சைவ கோபி மஞ்சூரியன்! ரெசிபி இதோ…

10 நிமிடத்தில் முருங்கை கீரை வெந்து விடும், அடுத்ததாக அதில் முட்டையை உடைத்து சேர்த்து கொள்ளவும். இறுதியாக சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது சுவையான முருங்கைக்கீரை முட்டை பொடிமாஸ் தயார்.